Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, January 30, 2015

தன்வந்திரி பீடத்தில் 1008 சுமங்கலிகள் பங்கேற்ற சுமங்கலி பூஜை சிறப்பாக நடைபெற்றது….












வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் உலக மக்களின் நலன் கருதி 1008 சுமங்கலி பூஜையுடன் ஸ்ரீ சூக்த ஹோமம் மற்றும் கர்ப ரக்ஷாம்பிகை யாகம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இதில் 1008 சுமங்கலிகள் கலந்து கொண்டு கணவன் மனைவி ஒற்றுமை வேண்டியும், மாங்கல்ய பலம் கிடைக்கவும், நீண்ட ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம் கிடைக்கவும், தம்பதியரிடையே சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை வேண்டியும், பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர வேண்டியும், குழந்தை பாக்யம் போன்ற பல் வேறு வேண்டுதல்களை முன்வைத்து  கூட்டுப்பிரார்த்தனை செய்தனர்.

மேலும் வேலூர் மாவட்ட  ஆட்சியர் முனைவர் திரு. நந்தகோபால், வாலாஜாபேட்டை வட்டாட்சியர் திரு. மணிலா, வருவாய் ஆய்வாளர் திரு. சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர் கல்யாணராமன், இராணிப்பேட்டை கோட்டாட்சியர் பிரியதர்ஷ்ணி மற்றும் அரசு அதிகாரிகள், உயர் நீதிமன்ற அதிகாரிகள், ஊர் தலைவர்கள், ஊட்டி ராஜசேகர், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட சௌபாக்ய பொருட்களான மஞ்சள், குங்குமம், திருமாங்கல்ய சரடு, கண்ணாடி, சீப்பு, வெற்றிலை பாக்கு, பழம், புஷ்பம், அட்சதை, புடவை, தன்வந்திரி படம், தன்வந்திரி பிரசாதம், தன்வந்திரி பை, இனிப்பு, மற்றும் அன்னபிரசாதம் முதலியன வழங்கப்பட்டன.

இந்த பூஜைக்குத் தேவையான பொருட்களை புதுடில்லி ஸ்ரீமதி, ஸ்ரீ A.V.வெங்கட்நாத், சென்னை, திரு.பட்டாபிராமன் மற்றும் பொதுமக்களும் உதவிகளை செய்து சிறப்பித்தனர்.

மேலும் 10க்கும் மேற்பட்ட சிறந்த வேதவிற்பன்னர்களைக் கொண்டு ஹோமங்கள் சிறப்பாக நடைபெற்றது. ஹோமத்தின் முடிவில் கலச தீர்த்தத்தைக் கொண்டு பீடத்தில் அமைந்துள்ள ஆரோக்ய லட்சுமி தேவிக்கும், மரகதேஸ்வர சமேத மரகதீஸ்வரி தேவிக்கும் சிறப்பு அபிஷேம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சியடைந்தனர். திருமதி. நிர்மலா முரளிதரன் இதற்கான ஏற்பாடுகளை செய்தார் என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.

1 comment: