வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்ஏக தின லக்ஷ மஹா கணபதி ஹோமத்துடன்ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள் நடைபெற்றது.
இராணிப்பேட்டை
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி
“யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் ஆங்கில
புத்தாண்டு முன்னிட்டு இன்று 01.01.2020 புதன்கிழமை
காலை
10.00 மணி முதல்
மாலை 4.00 மணி வரை
ஏக தின லக்ஷ மஹா கணபதி ஹோமத்துடன், ஸ்ரீ சரஸ்வதி ஹோமம், மஹா சுதர்ஸன ஹோமம், ஆயுஷ்ய
ஹோமம்,
மஹா தன்வந்திரி ஹோமம், குபேர லக்ஷ்மி ஹோமம் ஆகிய
ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள் நடைபெற்றது.
இதில்
கோபூஜை, மங்கள இசை, வேதபாரயணம், யாகசாலை பூஜை, விநாயகர் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து
நெய், தேன், மூலிகைகள், நவதானியங்கள், நவசமித்துகள், கொழுக்கட்டை, அருகம்புல், சுண்டல்,
பழங்கள், பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. இவ்வைபவங்கள்
திரு. N.பரணிகுமார், திரு. பெருங்குளம் S.ராமகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. இதில்
இராணிப்பேட்டை ஆடிட்டர் தேவராஜன், சென்னை ராமசந்திரன், கரூர் அன்பு முத்துராஜா, கோயம்பத்தூர்
சந்தோஷ், புதுச்சேரி சீனிவாசன், ஊட்டி ராஜசேகர் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதில் கல்வியில் வளம் பெறவும், ஆயுள் பயம்
அகலவும், நீண்ட ஆயுள் பெறவும், உடற்பிணி மனப்பிணி அகலவும், வளமான வாழ்க்கை பெறவும்
கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். இதனை தொடர்ந்து தொடர் அன்னதானம் நடைபெற்றது.
இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment