வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 365 நாள் – 365 ஹோமத்தின் 10வது நாள் ஹோமத்துடன் பௌர்ணமி யாகங்கள் நடைபெற்றது.
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதியும், உலக க்ஷேமத்திற்காகவும் சென்ற 26.04.2012 முதல் 25.05.2013 வரை நடைபெற்ற 365 நாள் – 365 யாகம், ஏகோபித்த பக்தர்கள் வேண்டு கோளுக்கிணங்க இரண்டாவது முறையாக 01.01.2020 புதன்கிழமை மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து பத்தாவது நாளான இன்று 10.01.2020 வெள்ளிக்கிழமை ஸ்ரீ சித்தரகுப்தர் ஹோமம் நடைபெற்றது. இதில், தம்பதிகள் அன்னோன்யம், கேது தோஷ நிவர்த்தி, ஆயுள் விருத்தி, செல்வ விருத்தி, முற்பிறவி மற்றும் இப்பிறவி கர்மாக்கள் அகல, மற்றும் பல நன்மைகள் பெற பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஸ்ரீ சித்ரகுப்த தேவனுக்குரிய பூக்கள், திரவியங்கள், நிவேதன பொருட்கள், பழங்கள், வஸ்திரங்கள் சேர்க்கப்பட்டது. மேலும் பௌர்ணமியை முன்னிட்டு இன்று ஆண்கள் திருமணத்தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமம், பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வர கலா பார்வதி யாகம், தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால யாகம் நடைபெற்றது.
தொடர்ந்து 365 நாள் – 365 ஹோமத்தின் 11வது நாளான நாளை 11.01.2020 சனிக்கிழமை, வாழ்க்கையில் பல்வேறு நன்மைகள் பெறவும், கணவன் மணைவி ஒற்றுமை மற்றும் மேலும் பல நலன்கள் பெற ஸ்ரீ அனுசுயா தேவி ஹோமமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது. இவ்வைபவம் வருகிற 31.12.2020 வரை நடைபெற உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்
.
No comments:
Post a Comment