வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்சமத்துவ பொங்கலுடன் சமய நூல் வழங்கும் விழாநடைபெற்றது.
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இன்று 15.01.2020 புதன்கிழமை காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை ஆன்மிகம் வளரவும், நற்சிந்தனைகள் தழைத்தோங்கவும், அவரவர்களின் மத
குருமார்களையும், தெய்வங்களையும் பக்தியுடனும், சிறத்தையுடனும் வழிபட வேண்டியும், நல் ஒழுக்கமும்,
மனித நேயமும், மத நல்லிணக்கமும், தர்ம சிந்தனைகளும், தழைத்தோங்க வேண்டும் என்ற உயரிய
நோக்கத்தில் 16ம் ஆண்டு சமத்துவ பொங்கலுடன் சமய நூல் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் வாலாஜாபேட்டை காவல்துறை ஆய்வாளர் திரு. பாலு,
திரு. சூரி மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மேலும் பங்கேற்ற பக்தர்களுக்கு
யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment