தன்வந்திரி பீடத்தில்வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டுசொர்க வாசல் திறப்பு விழாவும்சிறப்பு ஹோமங்களும்
நடைபெற்றது.
இராணிப்பேட்டை
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும்
பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்” ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி இன்று 06.01.2020 திங்கள்கிழமை சுக்லபட்ச ஏகாதசி எனும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு
விடியற்காலை 5.00 மணியளவில் கோபூஜையுடன் சொர்க்கவாசல் (பரமபத வாசல்) திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மூல
ஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பகவான்
புறப்பட்டு வந்து, பரமபத வாசல் சந்நிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி புரிந்தனர்.
சரணாகதி தத்துவத்தை முன்னிருத்தும் பொழுட்டு பக்தர்கள் பரமபத வாயலில் பனிந்து
வந்து தரிசித்தனர். இதனை தொடர்ந்து ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் மூலவருக்கு பல்வேறு
புஷ்பங்களால் அர்ச்சனையும், ஆராதனையும், ஸ்ரீ பால ரங்கநாதர் திருச்சன்னதியில்
சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, விசேஷ பூஜைகள் நடைபெற்று துளசி தீர்த்த பிரசாதம்
வழங்கப்பட்டது. மேலும் காலை 8.00 மணியளவில் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஹோமம், ஸ்ரீ சூக்த ஹோமம், புருஷ சூக்த
ஹோமம், தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம்
போன்ற ஹோமங்கள் நடைபெற்றது. பங்கேற்ற பக்தர்களுக்கு
யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த
தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment