வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்பகவான் மஹாவீரர், ஸ்ரீ அகத்தியர், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஆலய புனர் பிரதிஷ்டை நடைபெற்றது.
இராணிப்பேட்டை
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி
“யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இன்று
30.01.2020 வியாழக்கிழமை
காலை
9.00 மணி முதல்
11.30 மணி வரை
பகவான் மஹாவீரர், ஸ்ரீ அகத்தியர், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஆலயங்களின் புனர் பிரதிஷ்டா
வைபவமும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
காலை
மங்கள இசையுடன் கோ பூஜை, வேத பாராயணங்களுடன் யாகசாலை பூஜை நடைபெற்று, மஹா கணபதி ஹோமம்,
கலச பூஜை, மஹாவீரர் அகஸ்தியர் மற்றும் ரமகிருஷ்ண பரமஹம்ஸர் நெய், தேன், மூலிகைகள்,
சமித்துகள், பழங்கள், நிவேதன பொருட்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் கொண்டு மூலமந்திர
ஹோமம், ருத்ர ஹோமத்துடன் மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து யாத்ரா தானமும், கலசபுறப்பாடும்
கலசாபாபிஷேகமும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று
பிரார்த்தனை செய்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை
வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment