வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்பாதாள ஹோமகுண்டம் திறப்பு விழா.
கலியுகத்தில் இறைவனின் அருளைப்பெற பக்தி சங்கீர்த்தனங்கள்,
நாமகீர்த்தனங்கள், உருவ வழிபாடுகள், தியான மார்கங்கள், யாக வழிபாடுகள் என பல்வேறு வழிகளில்
ஆராதித்து வருகின்றனர். நமது தன்வந்திரி பீடத்தில் கடந்த 16 ஆண்டுகளாக
யாகங்களுக்கும், ஹோம பூஜைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து வருவது அனைவரும் அரிந்ததே.
ஹோமமே க்ஷேமம், யாகமே யோகம் என்ற தாரக மந்திரத்துடன் உலக நலனுக்காகவும், தொழில்,
வியாபாரம், உத்யோகம், விவசாயம், திருமணம், குழந்தை பாக்யம், தம்பதிகள் ஒற்றுமை,
கடன் பிரச்சனை, திருஷ்டி தோஷங்கள் என பல்வேறு காரணங்களுக்காகவும் பல்லாயிர கணக்கான
ஹோமங்கள் நடைபெற்றுள்ள இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் மீண்டும் ஒரு யாகசாலை பாதாளத்தில்
எண்கோண வடிவில் பாதாள ஹோமகுண்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வருகிற 30.12.2019 திங்கள்கிழமை காலை 9.00 மணியிலிருந்து 9.30 மணிக்குள் நடைபெற உள்ளது.
இவ்விழா கோபூஜை, மங்கள இசை, வேதபாராயணங்கள், கணபதி பூஜையுடன் நடைபெற உள்ளது. இதில் திருமதி. மாலதி பிரசன்னா, திருமதி. அனுராதா முரளி பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். பக்தர்கள் அனைவரும் இதில் பங்கேற்று பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு
:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல்
- 9443330203
No comments:
Post a Comment