Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, January 6, 2020

365 Days - 365 Homam - 6th Day - Sri Vasavi Homam...


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
365 நாள் – 365 ஹோமத்தின்
ஆறாவது நாள்.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதியக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதியும், உலக க்ஷேமத்திற்காகவும் சென்ற 26.04.2012 முதல் 25.05.2013 வரை நடைபெற்ற 365 நாள்365 யாகம், ஏகோபித்த பக்தர்கள் வேண்டு கோளுக்கிணங்க இரண்டாவது முறையாக 01.01.2020 புதன்கிழமை மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து ஆறாவது நாளான இன்று 06.01.2020 திங்கள்க்கிழமை ஸ்ரீ வாசவி ஹோமம் நடைபெற்றது. இதில் உலக மக்கள் நலனுக்காகவும், திருமணத்தடை விலகவும், உறவுப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவும், மற்றும் பல நன்மைகள் பெற பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஸ்ரீ வாசவி தேவிக்கு உரிய புஷ்பங்கள், திரவியங்கள், நிவேதன பொருட்கள், பழங்கள், வஸ்திரங்கள் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து ஏழாவது நாளான நாளை 07.01.2020 செவ்வாய்கிழமை குடும்ப விருக்தி, வீட்டில் நஷ்ட நிலை நீங்கி லாபங்கள் பெருகவும். சொந்த வீடு, வாகனம் போன்ற யோகங்கள் அமைவும்  ஸ்ரீ மஹா விஷ்ணு ஹோமமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது. இவ்வைபவம் வருகிற 31.12.2020 நடைபெற உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.





No comments:

Post a Comment