வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
தை வெள்ளியை முன்னிட்டு
ஆரோக்யத்துடன் ஐஸ்வர்யம் தரும்
ஆரோக்ய லக்ஷ்மி திருமஞ்சனம்.
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி வருகிற 17.01.2020 தை முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மிக்கு
சிறப்பு திருமஞ்சனமும் விசேஷ ஆராதனைகளும் நடைபெற உள்ளது.
தை மாத
வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு உரிய நன்னாள். இந்த நாளில், அம்பாள் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில், சிறப்பு
வழிபாடுகள், விசேஷ பூஜைகள் நடைபெறும். தை மாத
வெள்ளிக்கிழமையில், அம்பாள்
கோவிலுக்கு சென்று அம்பாளை வணங்கினால், நம்மையும் நம்
குடும்பத்தையும் தழைக்கச் செய்வார். வீட்டில் உள்ள திருஷ்டி முதலானவை நீங்கும். வீட்டில்
மங்கள காரியங்கள் விரைவில் நடக்கும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தை மாத முதல் வெள்ளிக்கிழமை உலக மக்கள் நலன் கருதியும், ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற்று அனைவரும் மகிழ்ச்சியுடன் நல்வாழ்வு வாழவும், கஷ்டங்கள் நீங்கவும், கடன் தொல்லைகள் அகலவும், குடும்பத்தில் லக்ஷ்மி கடாக்ஷம் உண்டாகவும், ஆயுள் விருத்தி பெறவும், ராஜ வசியம்
உண்டாகவும், செல்வம், சுவர்க்கபோகம்
கிடைக்கவும், பாவநிவர்த்தி பெறவும் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம்,
பன்னீர் போன்ற பஞ்ச திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனமும், விசேஷ பூஜைகளும் நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் இதில்
பங்கேற்று பயன் பெற அன்புடன் அழைக்கின்றோம்.
இதில் பங்கேற்க
விரும்புபவர்கள் திருமஞ்சன திரவியங்கள், புஷ்பம், பழங்கள்,
நிவேதன பொருட்கள், வஸ்திரங்கள் அளித்து குடும்பத்தினர்களுடன்
இறை கைங்கரியத்தில் ஈடுபடலாம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
Email: danvantripeedam@gmail.com
No comments:
Post a Comment