தன்வந்திரி பீடத்தில்வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமமும்அஷ்டதிக் பாலகர் பூஜையும்.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர்
மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி
வருகிற 28.10.2019 திங்கள்கிழமை காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை வாஸ்து நாளை முன்னிட்டு வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமமும் அஷ்டதிக்
பாலகர் பூஜையும், பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேக,
ஆராதனைகள் நடைபெற உள்ளது.
அஷ்டதிக்
பாலகர்கள் :
அஷ்டதிக்
பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவர். இவர்கள் எண்திசை நாயகர்கள்
என்றும் அழைக்கப்படுகின்றனர். அஷ்டம் என்றால்
எட்டு, திக் என்றால் திசை, பாலகர்கள்
என்றால் காப்பவர்கள் என்பது பொருளாகும். கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு
ஆகியவை எண்திசைகள் ஆகும். இந்த
எண்திசைகளுக்குரிய அதிபதிகளாக முறையே இந்திரன், அக்னி தேவன், யமன், நிருதி, வருண தேவன், வாயு தேவன், குபேரன், ஈசானன்
விளங்குகின்றனர்.
அஷ்டதிக்
பாலகர்கள் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் கண்காணிக்கின்றனர் என்று
கருதப்படுகிறது. மேலும் இவர்கள் உயிர்களின் செயல்களுக்கு சாட்சியாகவும்
இருப்பதாகவும் இந்துமதத்தில் நம்பப்படுகிறது. இவர்களை வணங்கினால் எல்லா வளங்களும்
கிடைப்பதாக கருதப்படுகிறது.
வாஸ்து புருஷன் :
அந்தகன் என்கிற
அசுரன், சம்காரம் செய்யப்பட்ட காலத்தில், சிவபெருமானின்
நெற்றியிலிருந்து விழுந்த வியர்வைத் துளி பூமியில் விழுந்து மீண்டும் ஓர் அசுரனாக
மாறி பூமியை விழுங்க முற்பட்டபோது, சிவபெருமான், வீரபத்திரரை அனுப்பி அந்த அசுரனை கீழே தள்ளச்செய்து, அவன் மீது பிரம்மன் முதலான 53 தேவதைகளை
வசிக்கும்படி பணித்தார். அந்த அரக்கன்தான் வாஸ்து புருஷன். வாஸ்து பகவான்
பெரும்பாலும் யோக நிலையிலேயே இருப்பார். அவர் வருடத்தில் சில நாட்கள் மட்டுமே
விழித்திருப்பார் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. அப்படி அவர் விழித்திருக்கும்
நாட்கள் வாஸ்து நாட்கள் என அழைக்கப்படுகின்றன. அந்த நாட்களில் மனை, வீடு, பூமி
சம்பந்தப்பட்ட அனைத்து நற்காரியங்களையும் தொடங்கினால் மங்களம் பெருகி நன்மை
கிடைக்கும்.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த வாஸ்து பகவானையும், அஷ்டதிக் பாலகர்களையும்
வேண்டி நடைபெறும் இந்த ஹோமத்திலும் பூஜைகளிலும் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருளுடன்
குருவருள் பெற்று ஆரோக்யம், ஆனந்தம், ஐஸ்வர்யத்துடன் வாழ அன்புடன் அழைக்கின்றோம். இந்த
தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடம்
அனந்தலை
மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர்
மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
No comments:
Post a Comment