Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, October 20, 2019

Dasa Bhairavar Yagam


தன்வந்திரி பீடத்தில்தச பைரவர் யாகம்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு வருகிற 21.10.2019 திங்கள்கிழமை மாலை 5.00 மணி முதல் 7.30 மணி வரை ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத சொர்ணாகர்ஷண பைரவர், அஷ்ட பைரவர் சகித மஹா காலபைரவருக்கு தசபைரவர் யாகத்துடன் பஞ்ச திரவியாபிஷேகமும், விசேஷ அர்ச்சனையும் நடைபெற உள்ளது.

சொர்ணாகர்ஷண பைரவர் :

வெண்நிற மேனியுடன், கையில் அட்சய பாத்திரத்துடன், பக்தர்களுக்கு செலவத்தை அளிக்கும் விதமாக காட்சி கொடுப்பவர் சொர்ணாகர்ஷண பைரவர். செல்வத்தை அளிப்பதால் இவரை சொர்ண பைரவர் என்றும் பணம் தரும் பைரவர் என்றும் அழைக்கப்படுகிறது. இவரை வணங்கி வழிபடும் பக்தர்களுக்கு செல்வத்தையும், புகழையும் அளித்து வளமுடன் வாழ வழிகாட்டுபவர்.

அஷ்ட பைரவர்கள் :

எட்டு திக்குகளையும் காப்பதிற்கு மஹாபைரவர் எடுத்த அவதாமே அஷ்ட பைரவர்கள் ஆவார். இவர்கள் அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீக்ஷன பைரவர், சம்ஹார பைரவர் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்கள்.

மஹா காலபைரவர் :

இவர் காலத்தையும், கால மாற்றங்களைடும் கட்டுபடுத்த கூடியவர். நவக்கிரகங்களில் மிகவும் கொட்டுமையான பலன்களை தரும் சனி பகவானின் குருவானவர். நவக்கிரகங்களை கட்டுப்படுத்தி காலத்தை தீர்மானம் செய்பவர். இவர் கபால மாலைகள் அணிந்து, நாய் வாகனத்துடன், நிர்வாண கோலத்தில் காட்சி தருபவர். பக்தர்களின் பயத்தினை போக்குவதினால் இவரை பைரவர் என்றும், க்ஷேத்திரங்களை காப்பதினால் க்ஷேத்திர பாலகர் என்றும், நிர்வாண கோலத்தில் காட்சி தருவதினால் நிர்வாணி என்றும், பிரம்மசிரேச்சிதர், உக்ர பைரவர், வடுகர், ஆபத்துதாரனர், சட்டைநாதர், கஞ்சுகன், கரிமுக்தன், சித்தன், கபாலி, வாதுகன், வயிரவன் போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த தச பைரவர்களை வேண்டி நடைபெறும் இந்த யாகத்திலும், அபிஷேகத்திலும், விசேஷ ஆராதனைகளிலும் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற்று நலமுடன் வாழ அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

No comments:

Post a Comment