தன்வந்திரி பீடத்தில் இன்று குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகள் அருளானைப்படி குரு பெயர்ச்சியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நேற்று 28.10.2019 திங்கள்கிழமை
மாலை 4.00 மணியளவில் பூர்வாங்க பூஜைகள் துவங்கியது. இன்று 29.10.2019 செவ்வாய்கிழமை
மஹா கணபதி ஹோம்ம், நக்ஷத்திர ஹோமம், நவக்கிரக ஹோமம், ராசி பரிகார ஹோமம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது.
குரு பகவான், விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு,
இன்று (29ம் தேதி) அதிகாலை 3.18
மணிக்கு பிரவேசித்தார். அதையொட்டி, வாலாஜாபேட்டை
- சோளிங்கர் சாலையில் கீழ்புதுப்பேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ
மேதா தக்ஷிணாமூர்த்திக்கு குரு பெயர்ச்சி விழா குரு சாந்தி ஹோமம்
நடந்தது. தொடர்ந்து நெய், பால், தயிர்,
தேன், இளநீர், விபூதி,
பன்னீர் என 20 வகையான பொருட்களால்
சுவாமிக்கு அபிஷேகத்துடன் 10 க்கும் மேற்பட்ட புஷ்பங்களால் புஷ்பாஞ்சலியும், அதனை
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பங்கேற்ற பக்தர்களுக்கு
சொர்ண யந்திரம், தன்வந்திரி டாளர், புகைப்படம், விபூதி, குங்குமத்துடன் ஹோம
ரக்ஷையும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment