மருத்துவர் கோலத்தில் மருத்துவ கடவுள்.
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டையில் கீழ்புதுப்பேட்டையில் “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர்
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளால் காக்கும் கடவுளும்,
நோய் தீர்க்கும் மருத்துவ கடவுளுமான ஸ்ரீ தன்வந்திரி பகவான் மூலவராக 8 அடி
உயரத்தில் பிரதிஷ்டை செய்யட்டுள்ளது. இவருடன் 78 விதமான
பரிவார தெய்வங்களும், சிவலிங்க ரூபமாக 468 சித்தர்களுக்கும்
திருச்சன்னதிகள் அமைத்து உலக நலன்கருதி பல்வேறு வகையான யாகங்களும் பூஜைகளும், லக்ஷார்ச்சனைகளும்,
அபிஷேக ஆராதனைகளும் அந்தெந்த தெய்வங்களுக்குரிய விசேஷ நாட்களில் தன்வந்திரி பீடத்தில்
ஸ்வாமிகள் அருளானைப்படி நடைபெற்று வருகிறது.
அந்த
வகையில் தீபாவளி மற்றும் தன்வந்திரி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு தன்வந்திரி ஹோமத்துடன்
1008 கலச
தீர்த்த திருமஞ்சனமும், அன்னபூரணி, குபேர லக்ஷ்மி, மஹ ப்ரத்யங்கிரா தேவிக்கு விசேஷ ஆராதனைகளும் அமாவாசையை முன்னிட்டும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மருத்துவ கடவுளான தன்வந்திரி பகவான், மருத்துவர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு
தரிசனம் வழங்கினார். தொடர்ந்து நெய், மிளகு, சுக்கு, திப்பலி கொண்டு தயாரித்த தீபாவளி
லேகியம் சர்வ ரோக நிவாரண பிரசாதமாக பக்தர்களுக்கு ஸ்வாமிகள் வழங்கி ஆசிர்வதித்தார்.
இந்த பிரசாதம் வருகிற 29.10.2019 செவாய்க்கிழமை
வரை வருகை புரியும் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியன்று
ஒரு சில மணி நேரம் மட்டும் மருத்துவர் அலங்காரத்தில் ஸ்ரீ தன்வந்திரி பகவான் தரிசனம்
அளிப்பார். அந்த வகையில் இந்த ஆண்டும் மருத்துவர் கோலத்தில் தரிசனம் அளித்தார். இந்த
தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment