தன்வந்திரி பீடத்தில் தீபாவளித்திருநாளில்உலக நலன் கருதிஸ்ரீ லக்ஷ்மி குபேர யாகம், மஹா தன்வந்திரி ஹோமம்திருஷ்டி துர்கா ஹோமம் நடைபெறுகிறது.
தீபாவளி
சிறப்பு:
தீபாவளி அல்லது
தீப ஒளித்திருநாள் என்பது இந்து மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில்
ஒன்றாகும். வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக்
கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடுகிறது. ஒவ்வொருத்தர் மனதிலும் உள்ள தோஷங்களை நீக்கி தீப ஒளி போல் பிரகாசமான வாழ்க்கை தரக்கூடிய நாளே தீபாவளி ஆகும். மனதில் இருக்கும் இருட்டை விலக்குவதற்கு வெளிச்சம் கொண்டு வருவதுதான்
தீபாவளி.
இத்தகைய
சிறப்பு வாய்ந்த தீபாவளியை முன்னிட்டு நாளை 27.10.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி லக்ஷ தாமரை விதைகளால் ஸ்ரீ லக்ஷ்மி குபேர யாகம், மஹா தன்வந்திரி ஹோமம், திருஷ்டி துர்கா ஹோமங்களுடன் பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ லக்ஷ்மி குபேரருக்கும், ஸ்ரீ ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவிக்கும், ஸ்ரீ
தன்வந்திரி உற்சவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அர்ச்சனை நடைபெற உள்ளது.
லக்ஷ்மி குபேர ஹோமம் மற்றும் அர்ச்சனை சிறப்பு :
லக்ஷ்மி குபேர பூஜை என்பது ஸ்ரீ லக்ஷ்மி தேவியையும், ஸ்ரீ குபேரரையும் வேண்டி நடைபெறும் வழிபாடாகும். லட்சுமி குபேர
பூஜை செய்வதால், சங்கடங்கள், காரியத்தடைகள் நீங்கும். கடன் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம், நம் இல்லத்தில் செல்வம் பெருகும், மேலும்நிலையான செல்வத்தை நமக்கு
அருளும் என்பது ஐதீகம்.
மஹா தன்வந்திரி ஹோமம் :
இந்த ஹோமம் நோய் தீர்க்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பெருமாளை வேண்டி நடைபெறும் ஹோமம் ஆகும். இந்த மஹா தன்வந்திரி ஹோமம் செய்வதின் மூலம் உடல் நோய் மற்றும் மந நோய்கள் அகலும், நீண்ட ஆயுள் கிடைக்கும், மேலும் ஆரோக்யமான வழ்கையை அருளும்.
திருஷ்டி துர்கா ஹோமம் :
திருஷ்டி துர்கா என்றால் திருஷ்டியால் ஏற்படக்கூடிய தோஷங்களை நிவர்த்தி செய்பவள் என்று பொருள். திருஷ்டி தோஷம்
ஒருவரின் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை தடுக்கிறது. கண் திருஷ்டியால் ஏற்ப்படும்
தோஷங்கள் அகல நடைபெறும் ஹோமமே திருஷ்டி துர்கா ஹோமம் ஆகும்.
இத்தகைய சிறப்புகள்
வாய்ந்த தீபாவளியன்று நடைபெறும் சிறப்பு ஹோமமங்களிலும் பூஜைகளிலும் பக்தர்கள் அனைவரும்
பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற்று ஆனந்தம், ஆரோக்யம், ஐஸ்வர்ய்த்துடன் நல்வாழ்வு வாழ அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடம்
அனந்தலை
மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர்
மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
No comments:
Post a Comment