ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் தீபாவளியை முன்னிட்டு பல்வேறு பூஜைகளும் யாகங்களும் நடைபெற்றது.
அனைத்தும் பெற தங்க அன்னபூரணிக்கு சிறப்பு வழிபாடும், சகல விதமான தோஷங்கள்
நீங்கி ஐஸ்வர்யம் பெற ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவிக்கு திருஷ்டி துர்கா ஹோமமும், உடல்
பிணி, மனப்பிணி நீங்க மஹா தன்வந்திரி ஹோமம், அஷ்ட ஐஸ்வர்யமும் கிடைக்க வேண்டி அஷ்ட
பைரவர், சொர்ண பைரவர், லக்ஷ்மி வராகர், லக்ஷ்மி நரசிம்மர், ஆரோக்ய லக்ஷ்மி, பூஜையுடன்
லக்ஷம் தாமரை விதைகளை கொண்டு லக்ஷ்மி குபேர யாகமும் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் “யக்ஞஸ்ரீ
கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி தீபாவளி மற்றும் அமாவாசையை
முன்னிட்டு இன்று 27.10.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை உலக நலன் கருதி மேற்கண்ட ஆரோக்யத்துடன் அஷ்ட
ஐஸ்வர்யம் தரும் பல்வேறு யாகங்கள், பூஜைகள் நடைபெற்று, ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி, ஸ்ரீ
தன்வந்திரி பெருமாள், ஸ்ரீ லக்ஷ்மி குபேரர், ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர்,
அஷ்ட பைரவர், ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி தாயார் போன்ற தெய்வங்களுக்கு விசேஷ திருமஞ்சனமும்,
பல்வேறு புஷ்பங்களால் சிறப்பு அர்ச்சனையும் நடைபெற்றது.
இந்த யாக பூஜைகளில் நெய், தேன், பால், தாமரை புஷ்பங்கள், பல வர்ண புஷ்பங்கள்,
மிளகாய் வற்றல், நவதானியங்கள், மூலிகைகள், நவசமித்துகள், பழங்கள், நிவேதன பொருட்கள்
போன்றவை சமர்ப்பிக்கபட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு
யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் பூஜை பிரசாதங்களுடன் உடல் நோய் தீர்க்கும்
ஔஷதமாகும் தீபாவளி மருந்து வழங்கப்பட்டது. மேலும் பக்தர்கள் ஸ்வாமிகளிடம் ஆசிகளை பெற்று
சென்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment