Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, October 30, 2019

Bala Tripurasundari Prathishta - 1008 Sumangali Pooja - Koti Japa Maha Sudarsana Danvantri Drishti Durga Homam Poorthi Vizha


வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி ஆலயம்மஹா கும்பாபிஷேகத்துடன்1008 சுமங்கலி பூஜை.

நவம்பர் 1 முதல் 3 வரை நடைபெறுகிறது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் 59 வது ஜெயந்தியை முன்னிட்டு வருகிற ஐப்பசி 17 ஆம் தேதி 03.11.2019 ஞாயிற்றுக்கிழமை சப்தமி திதி, உத்திராட நக்ஷத்திரம், அம்ருதயோகம் கூடிய சுப லக்னத்தில் உதயாதி நாழிகை 13.53 க்கு மேல் 15.13 க்குள் ( காலை 11.00 மணி முதல் 11.50 மணிக்குள்) மகர லக்னத்தில் ஸ்ரீ பாலா ஆலய மஹா கும்பாபிஷேகம் சென்னை – 42, ஸ்ரீ லலிதாஸமிதி மோகன் குருஜி அவர்கள் வழிகாட்டுதல்ப்படி 40 க்கும் மேற்பட்ட ஸ்ரீ வித்யா உபாசகர்களை கொண்டு நடைபெறுகிறது.

ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி :

சித்தர்கள் தலைவியாகிய வாலை என்கிற ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி குழந்தை வடிவானவள். ஸ்ரீசக்கிரத்தின் வடிவானவள். இவள் அனைவருக்கும் பக்தியையும், ஞானத்தையும், அறிவையும் வழங்கக்கூடியவள். சதா சர்வ காலமும், அவளுடைய நாமத்தை, மூல மந்திரத்தை உச்சரிப்பவர்களூக்கு ஆயுள் கீர்த்தியையும், செல்வ செழிப்பையும், சௌபாக்யத்தையும் அளித்து காப்பவள்.

ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி பிரதிஷ்டா வைபவத்துடன் கோடி ஜப மஹா சுதர்சன தன்வந்திரி திருஷ்டி துர்கா ஹோமம் பூர்த்திவிழாவும், 1008 சுமங்கலி பூஜை, 59 தம்பதி பூஜை, 108 தவில் நாதஸ்வர கலைஞர்களின் இசை சங்கமம் நடைபெற உள்ளது.

யாகசாலை பூஜைகள் கீழ்கண்ட நிகழ்ச்சி நிரல்ப்படி நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி நிரல்

01.11.2019 வெள்ளிக்கிழமை

காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை : மங்கள இசை, கோ பூஜை, விக்நேஸ்வர பூஜை, அனுக்ஞை, ஸ்ரீ மஹா கணபதி ஹோமம்.

மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை : வாஸ்து ஹோமம், புண்யாஹவாசனம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், ஆசார்யவரணம், கும்பாலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை, ஹோமம், சதுர்வேத பாராயணம், பூர்ணாஹுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.

02.11.2019 சனிக்கிழமை

காலை 7.00 மணி முதல் 10.30 மணி வரை : மங்கள இசை, கோ பூஜை, 2 ஆம் கால பூஜை, சதுர்வேத பாராயணம், பூர்ணாஹுதி, தீபாராதனை, நேத்ரோன் மீலனம், அஷ்ட பந்தன சமர்ப்பணம், பிரசாதம் வழங்குதல்.

மாலை 5.00 மணிக்கு : வேலூர் ஸ்ரீ கிருஷ்ண கலா மந்திர் மாணவிகளின் பரதநாட்ய நிகழ்சி.

மாலை 6.30 மணிக்கு : மங்கள இசை, 3 ஆம் கால பூஜை, ஹோமம், சதுர்வேத பாராயணம், பூர்ணாஹுதி.

03.11.2019 ஞாயிற்றுகிழமை

காலை 7.30 மணிக்கு : மங்கள இசை, கோ பூஜை, 4 ஆம் கால பூஜை, ஹோமம், ஸ்பர்சாஷிதி.

காலை 9.00 மணிக்கு : 59 தம்பதிகள் பங்கேற்கும் தம்பதி பூஜை.

காலை 10.00 மணிக்கு : 1008 சுமங்கலிகள் பங்கேற்கும் சுமங்கலி பூஜை, குரு பெயர்ச்சி மஹா யாகம்.

காலை 11.12 மணி முதல் 11.50 மணிக்குள் : நாடிசந்தானம், பூர்ணாஹுதி, யாத்ராதானம், மகர லக்னத்தில் மஹாகும்பாபிஷேகம், பிரசாதம் வழங்குதல்.

காலை 11.50 மனிக்கு : 200 பெண்கள் பங்கேற்கும் லலிதா சஹஸ்ரநாம பாராயணம்.

மதியம் 1.30 மணிக்கு : அன்னதானம் நடைபெறும்.

மாலை 3.00 மணிக்கு : திருமதி. ஜலஜா கோபாலகிருஷ்ணன் குழுவினரின் சூக்த பாராயணங்கள், ஸ்வாமிகளிடம் அருளாசியுடன் அருட்பிரசாதம் பெறுதல்.

மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை : 108 தவில் நாதஸ்வர கலைஞர்கள் பங்கேற்கும் இசை சங்கமம்.

மாலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை : கோடி ஜப சுதர்சன தன்வந்திரி திருஷ்டி துர்கா ஹோமம் பூர்த்தி விழா.

பக்தர்கள் அனைவரும் இவ்வைபவங்களில் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற்று நல்வாழ்வு வாழ அன்புடன் அழைக்கின்றோம். மேலும் இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் நெய், தேன், மூலிகைகள், புஷ்பங்கள், பழங்கள், மளிகை பொருட்கள், ஆச்சாரிய வஸ்திரங்கள், பூர்ணாஹுதி வஸ்திரங்கள், சமித்துகள் அளித்து குடும்பத்தினருடன் இறைகைங்கரியத்தில் ஈடுபடலாம். இந்த யாகத்திற்கு பல்வேறு இடங்களிலிருந்து மடாதிபதிகள், சாதுக்கள், ஸ்ரீ வித்யா உபாசகர்கள் மற்றும் தொழிலதிபர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203





No comments:

Post a Comment