Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, October 18, 2019

Sri Bala Tripura Sundari Karikkola Bhavani


ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி விக்கிரகம்கரிக்கோல பவனி.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலைமதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி வருகிற 03.11.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணிக்குள் ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி ஆலய மஹாகும்பாபிஷேகம், 1008 சுமங்கலி பூஜை, 59 தம்பதி பூஜையுடன் நடைபெற உள்ளது.
மேற்கண்ட மூல விக்கிரகம் (கற்சிலை) 3.5 அடி உயரத்தில் 1.5 அடி அகலத்தில் மகாபலிபுரம் பிரகாஷ் சிற்பகலைக்குடத்தில் திரு. லோகநாத ஸ்தபதி அவர்களால் வடிவமைக்கப்பட்டு, பக்தர்கள் தரிசிக்கும் வகையில் 17.10.2019 வியாழக்கிழமை முதல் கரிக்கோல பவனியாக மகாபலிபுரத்திலிருந்து, கேளம்பக்கம், தரமணி, வேள்ச்சேரி, தாம்பரம், நெமிலி பாலா பீடம் வழியாக வாலாஜாபேட்டைக்கு வருகைபுரிந்து இன்று 18.10.2019 வெள்ளிக்கிழமை வாலாஜா பஸ் நிலயம், வாலாஜா பூக்காரர் தெரு, ஏகாம்பரநாதர் கோவில் தெரு, அணைக்கட்டு ரோடு, சோளிங்கர் ரோடு, உப்புக்காரர் தெரு, ஸ்ரீசாயி கார்டன் அம்மூர் ரோடு, ஆற்காடு மஹாத்மா காந்தி முதியோர் இல்லம் போன்ற இடங்களில் பக்தர்க+ளுக்கு தரிசனம் கொடுத்து ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு வந்து சேர்ந்ததுள்ளது.
சித்தர்கள் தலைவியாகிய வாலை என்கிற ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி குழந்தை வடிவானவள். ஸ்ரீசக்கிரத்தின் வடிவானவள். இவள் அனைவருக்கும் பக்தியையும், ஞானத்தையும், அறிவையும் வழங்கக்கூடியவள். சதா சர்வ காலமும், அவளுடைய நாமத்தை, மூல மந்திரத்தை உச்சரிப்பவர்களூக்கு ஆயுள் கீர்த்தியையும், செல்வ செழிப்பையும், சௌபாக்யத்தையும் அளித்து காப்பவள்.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியை பக்தர்கள் அனைவரும் தரிசித்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம். இந்த தக்வலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203





No comments:

Post a Comment