Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, November 23, 2017

தைலாபிஷேகம்..........

வாலாஜாபேட்டை
தன்வந்திரி பீடத்தில்
 நவம்பர் 28 முதல் டிசம்பர் 14 வரை
மூலவர் தன்வந்திரிக்கு  தைலாபிஷேகம்

வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டை அனந்தலை மதுரா கீழ்பதுப்பேட்டை யில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உலக மக்களின் உடல் பிணி மற்றும் உள்ளத்துப் பிணி தீர 8 அடி உயரமுள்ள ஸ்ரீ தன்வந்திரி முலவருக்கு 13ம் ஆண்டு தைலாபிஷேக திருவிழா காலை 8.00 மணி முதல் 11.30 மணி வரை  இந்த வைபவம் நவம்பர் 28 செவ்வாய்க் கிழமை முதல் டிசம்பர் 14ம் தேதி வியாழக் கிழமை வரை நடைபெறுகிறது.

தன்வந்திரி பகவான் யார் :

தன்வந்திரி பகவான் நோய் தீர்க்கும் கடவுள் இவர் மகா விஷ்ணுவின் அவதாரம் கைகளில் அமிர்த கலசம் ஏந்தியவர் மருத்துவ கடவுள் உலக மக்களின் உடல் பிணி உள்ளத்து பிணி நீக்கி ஆயுஙள ஆரோக்கியத்தை தருபவர். இவரை வழிபடுவதால் அனைத்து விதமான உடல் நோய்களும் மற்றும் மன நோய்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தைலாபிஷேகம் செய்வதால் ஏற்படும் பலன்கள் :

இங்கு தைலம் என்பது நல்ல எண்ணையை கொண்டு மூலவர் தன்வந்திரி பகவானுக்கு மூலமந்திர ஜபத்துடன் அபிஷேகம் நடைபெற உள்ளது. நல்ல எண்ணை என்பது எள் விதையில்ருந்து எடுக்கப்படுவதாகும். எள் என்பது சனீஸ்வர பகவானுக்கு வேண்டிய விஷேச திரவியமாகும். எள்ளை கொண்டு தான் சனி கிரக தோஷம் உள்ளவர்களுக்கு பரிகார பிரித்தியாக எள்ளு தானமும், எள்ளு ஹோமமும், எள்ளு எண்ணையை கொண்டு தெய்வங்களுக்கு எண்ணை காப்பு சாற்றுவது போன்ற வைபவங்களுக்கு சனி பிரித்தியாக கருதுகிறோம். இத்தகைய எண்ணையினால் நோய் தீர்க்கும் கடவுளான தன்வந்திரி பகவானுக்கு தைலாபிஷேகமாக செய்வதால் நோய் உற்றவர்கள் விரைவில் குணமடையவும், ஆயுள் தோஷம் நீங்கவும், மனத் தடைகள், மன நோய்கள் நீங்கவும், நவகிரகங்களால் ஏற்படும் நோய்கள் மற்றும் கஷ்டங்கள் குறையவும், ஏழரை சனி, அஷ்டம சனி, அர்ராஷ்டம சனி போன்ற சனி கிரகத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கவும், வாய் புண், வயிற்று புண், குடல் சம்மந்தமான நோய்கள், கண் சம்மந்தமான நோய்கள், ஆரோக்கிய சம்மந்தமான குறைகள் நீங்குவதற்க்கு வழி வகை செய்யும்.
14.12.2017 வியாழக் கிழமை காலை 10.00 மணிக்கு
108 சுமங்கலிகள் பங்கேற்கும் சுமங்கலிபூஜை

தம்பதிகள் நலன் கருதி மேற்கண்ட தினத்தில் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ சூக்த ஹோமம் மற்றும் கர்ப ரக்ஷாம்பிகை யாகத்துடன் 108 சுமங்கலிகள் பங்கேற்க்கும் சுமங்கலி பூஜையும் நடைபெறுகிறது..

இதில் 108 சுமங்கலிகள் கலந்து கொண்டு கணவன் மனைவி ஒற்றுமை வேண்டியும், மாங்கல்ய பலம் கிடைக்கவும், நீண்ட ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம் கிடைக்கவும், தம்பதியரிடையே சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை வேண்டியும், பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர வேண்டியும், குழந்தை பாக்யம் போன்ற பல்வேறு வேண்டுதல்களை முன்வைத்து சுமங்கலி பூஜையும் கூட்டுப்பிரார்த்தனையும் யாகத்துடன்  நடைபெற உள்ளது.

இந்த பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட சௌபாக்ய பொருட்களான மஞ்சள், குங்குமம், திருமாங்கல்ய சரடு, கண்ணாடி, சீப்பு, வெற்றிலை பாக்கு, பழம், புஷ்பம், அட்சதை, புடவை, ஜாக்கெட் ஆகியவைகள் சுமங்கலிகளுக்கு வழங்க உள்ளனர். இதனை தொடர்ந்து 15.12.2017ல் மூலவர் தன்வந்திரிக்கு 108 கலசங்களில், 108 மூலிகை கொண்டு சிறப்பு அபிஷேகத்துடன் வருஷாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுப்பேட்டை,
அனந்தலை மதுரா, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர்  மாவட்டம், தமிழ்நாடு,
தொலைபேசி: 04172-230033 / 230274 / 09443330203
Web: www.danvantritemple.org | www.danvantripeedam.blogspot.in

No comments:

Post a Comment