தன்வந்திரி பீடத்தில்
உலக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு
சிறப்பு கூட்டுப்பிரார்த்தனை
வேலூர் மாவட்டம்
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகளின் ஆசிகளுடன் ஒவ்வொரு ஆண்டும் உலக தொழிலாளர் தினம், உலக மருத்துவர்கள் தினம்,
உலக புரோகிதர்கள் தினம், ஆகிய பல்வேறு விசேஷ தினங்கலில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள்,
கூட்டுப் பிரார்தனைகள் நடைபெற்று வருகிறது. இந்த வகையில் இன்று 14.11.2017 செவ்வாய்கிழமை
உலக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளின் நலன் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி
தன்வந்திரி பீடத்தில் சிறப்பு அபிஷேக பூஜைகளும், கூட்டுப் பிராத்தனையும் நடைபெற்றது.
இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment