வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
ஐப்பசி அன்னாபிஷேகம்.
வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடத்தில் இன்று
நவம்பர் மாதம் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை ஐப்பசி
பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
உள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கும், ஸ்ரீ இராகு கேதுவிற்கும் சிறப்பு அன்னாபிஷேகம்
நடைபெற்றது.
அன்னாபிஷேகப் பலன்கள்:
வியாபாரத்தில் பிரச்னை இருப்பவர்களும், நஷ்டமடைந்தவர்களும்
அன்னாபிஷேகத்தை தரிசித்துப் பிரசாதத்தை உண்டால் வியாபாரம் செழிக்கும். பள்ளிக் குழந்தைகளுக்கும்
ஏற்றது இது. சில குழந்தைகள்
நன்றாகப் படிப்பார்கள். ஆனால் தேர்வு நேரத்தில்
எல்லாம் மறந்து போகும். அந்தக்
குழந்தைகள் அன்னாபிஷேகப் பிரசாதத்தை உண்டால் எல்லாம் நன்றாக
நினைவில் நிற்கும். நீண்ட நாடளாக குழந்தைப்
பேறு இல்லாத தம்பதிகள் அன்னாபிஷேக
காட்சியை கண்டு பிரார்த்தனை செய்து
அன்ன பிரசாதம் உண்டால்
குழந்தை பிறக்கும். வருடம் முழுவதும் நல்ல
விளைச்சல் இருக்கும், ஊர் செழிக்கும், கலைகள்
வளரும், மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள்
என்பது நம்பிக்கை. எக்காலத்திலும் உணவுப் பஞ்சம் வராமல்
இருக்கவும் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தினர் மேற்கண்ட பலன்களை பெற இன்று
ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கும் ஸ்ரீ இராகு கேதுவிற்கும் சிறப்பு அன்னாபிஷேகம்
நடைபெற்றது! இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர்.
No comments:
Post a Comment