தன்வந்திரி பீடத்தில்
அகில உலக புரோகிதர்கள் நலன் கருதி
சிறப்பு ஹோமம்.
அகில
உலக புரோகிதர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களின்
நலன் கருதி 8 ஆம் ஆண்டு சிறப்பு தன்வந்திரி
யக்ஞம் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அவர்களின் ஆசிகளுடன் நடைபெற்றது.
ஸ்ரீ
வேத வ்யாசரின் திருவருளாலும் மற்றும் மகான்களின் ஆனுக்ரஹத்தாலும் சிறப்பாக பணியாற்றும்
புரோகிதர்களுடைய க்ஷேமம், குடும்ப க்ஷேமம், அவர்களைச் சார்ந்தவர்களின் க்ஷேமத்திற்காக
இன்று 16.11.2017 வியாழக் கிழமை காலை
6.00 மணி முதல் விசேஷமான முறையில் பூர்வாங்க பூஜையுடன்.மங்கள வாத்தியம், கோ பூஜை, சூரிய
நமஸ்காரம், விக்னேஸ்வரபூஜை, கணபதியக்ஞம்,
நவக்ரஹ யக்ஞம், ஸ்ரீமந் நாராயண யக்ஞம்,(ஜனார்தன யக்ஞம்),ஸ்ரீ லக்ஷ்மி யக்ஞம் மணிபூர்ணாஹூதி
மற்றும் பிரார்த்தனைகள் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடம் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு
டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அவர்களின்
ஆசிகளுடன் தென்னிந்திய புரோகிதர்கள் சங்கத்தின் நிர்வாகிகளின் முன்னிலையில் நடைபெற்றது.
அவ்வமையம்
சென்ற வாரம் இறைவனின் பாதம் அடைந்த தென்னிந்திய புரோகிதர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர்
ஆற்காடு திரு. ஆ.செ. நரசிம்மன் அவர்களின் ஆத்மா சாந்தி அடையவும் அவர் வழி பின்பற்றவும்
துணை பொதுசெயலாளர், வேலூர் திரு. சீதாராமன் அவர்கள் தலைமையில் பொருலாளர் திரு. கோபாலன்,
உப தலைவர் திரு. கீ. எல். கிருஷ்ண மூர்த்தி அவர்கள் முன்னிலையில் உறுதி மொழி எடுத்து
கொண்டு மோக்ஷதீபம் ஏற்றபட்டது. இதில் வேலூர் பா. சேகர், பி. ஆர். கணேஷ், குத்தாலம்
லக்ஷ்மணன் மற்றும் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டு பிராத்தனை செய்தனர்.
இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment