14.12.2017 வியாழக் கிழமை காலை 10.00 மணிக்கு
108 சுமங்கலிகள் பங்கேற்கும் சுமங்கலிபூஜை
தம்பதிகள் நலன் கருதி மேற்கண்ட
தினத்தில் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ சூக்த ஹோமம் மற்றும் கர்ப
ரக்ஷாம்பிகை யாகத்துடன் 108 சுமங்கலிகள்
பங்கேற்க்கும் சுமங்கலி பூஜையும் நடைபெறுகிறது.
இதில் 108 சுமங்கலிகள் கலந்து கொண்டு கணவன் மனைவி
ஒற்றுமை வேண்டியும், மாங்கல்ய பலம் கிடைக்கவும், நீண்ட ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம்
கிடைக்கவும், தம்பதியரிடையே சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை வேண்டியும், பிரிந்திருக்கும்
தம்பதியர் ஒன்று சேர வேண்டியும், குழந்தை பாக்யம் போன்ற பல்வேறு வேண்டுதல்களை முன்வைத்து
சுமங்கலி பூஜையும் கூட்டுப்பிரார்த்தனையும் யாகத்துடன் நடைபெற உள்ளது.
இந்த பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட
சௌபாக்ய பொருட்களான மஞ்சள், குங்குமம், திருமாங்கல்ய சரடு, கண்ணாடி, சீப்பு, வெற்றிலை
பாக்கு, பழம், புஷ்பம், அட்சதை, புடவை, ஜாக்கெட் ஆகியவைகள் சுமங்கலிகளுக்கு வழங்க உள்ளனர்.
இதனை தொடர்ந்து 15.12.2017ல் மூலவர் தன்வந்திரிக்கு
108 கலசங்களில், 108 மூலிகை கொண்டு சிறப்பு அபிஷேகத்துடன் வருஷாபிஷேகம் நடைபெற உள்ளது.
இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுப்பேட்டை,
அனந்தலை மதுரா, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர் மாவட்டம், தமிழ்நாடு,
தொலைபேசி:
04172-230033 / 230274
/ 09443330203
E-Mail:
danvantripeedam@gmail.com
No comments:
Post a Comment