Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, November 19, 2017

கந்தர்வராஜ யாகம்

தன்வந்திரி பீடத்தில்
கந்தர்வராஜ யாகம்


வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் இன்று 19.11.2017 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை கந்தர்வராஜ யாகம் நடைபெற்றது.

இந்த ஹோமத்தில் முதலில் கணபதி பூஜை, கிரகதோஷங்கள் நீங்குவதற்காக நவகிரக ஹோமம் நடத்தப்பட்டு பின்னர் கந்தர்வராஜ யாகம் சிறப்பாக நடைபெற்றது.

கந்தர்வராஜ யாகத்தின் மூலம்  எல்லாவிதமான திருமணத் தடைகளும் நீங்கி விரைவில் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம், கணவனுக்கு ஏற்ற மனைவி அமைவார்கள். அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும்.


இன்று 19.11.2017 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை சிறந்த வேத விற்பனர்களை கொண்டு கந்தர்வராஜ யாகம்  நடைபெற்றது. பங்கேற்ற நபர்களுக்கு கலசாபிஷேகம்   செய்து அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment