நாளை
தன்வந்திரி பீடத்தில்
சந்தான கோபால யாகம்
வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில்
அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் 18.11.2017 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 சந்தான கோபால யாகம் நடைபெற இருக்கிறது. குழந்தை
பாக்யம் இல்லாத தம்பதியர்களுக்கு விரைவில் குழந்தை பாக்யம் கிடைக்க வேண்டி சங்கல்பம் செய்து சந்தான
கோபால யாகம் சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்த யாகம் செய்வதின்
மூலம் அடையும் பலன்கள் ஏராளம். எல்லாவிதமான தடைகளும் நீங்கி விரைவில் குழந்தை பாக்யம் பெற்று மகிழ்ச்சியாக வாழலாம். தம்பதியருக்குள்
மிகுந்த அந்யோன்யம் ஏற்படும். நவநீத கிருஷ்ணனின் பரிபூரண அருளும் கிடைக்கும்.
அந்த வகையில் நாளை 18.11.2017 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 1,00 மணி வரை சிறந்த வேத விற்பனர்களை
கொண்டு சந்தான
கோபால யாகம் நடைபெற உள்ளது. இதில்
பங்கேற்க்கும் தம்பதியருக்கு வெண்ணெய் பிரசாதமும் வழங்கப்படும்.
ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளாலும், கயிலை
ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடனும் நடைபெற்று வருகின்ற
இந்த யாகத்தில்
தம்பதிகள் கலந்து கொண்டு தன்வந்திரி அருள்பெற
வேண்டுகிறோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு:
ஸ்ரீதன்வந்திரி
ஆரோக்ய பீடம்,
கீழ்புதுப்பேட்டை,
அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம், தமிழ்நாடு,
தொலைபேசி:
04172-230033 / 230274 / 09443330203
E-Mail : danvantripeedam@gmail.com
No comments:
Post a Comment