தன்வந்திரி பீடத்தில்
பதினோரு ஹோமங்கள்.
உலக நலன்
கருதி வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி
கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி இன்று 24.11.2017 வெள்ளிக்கிழமை,
திருவோண நட்சத்திரம், சஷ்டி திதி, வாஸ்து நாள் முன்னிட்டு ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஹோமம்,
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம், ஸ்ரீ குபேர லக்ஷ்மி யாகம், ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் யாகம்,
ஸ்ரீ தன்வந்திரி யாகம், ஸ்ரீ சுதர்சன ஹோமம், கார்த்தவீர்யார்ஜுனர் யாகம், வாஸ்து ஹோமம்,
சத்ரு சம்ஹார யாகம், திருஷ்டி துர்கா ஹோமம், பிரத்யங்கிரா ஹோமம், சூலினி ஹோமம் போன்ற
பதினோரு யாகங்கள் நடைபெற்று அதுக்குறிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அராதனயும்
நடைபெற்றது. பங்கேற்ற பக்தர்கள் ஆரோக்யம், கல்வி, செல்வம், ஆனந்தம், குடும்ப க்ஷேமம்
வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
இதில் ஏராளமான
நபர்கள் பங்கேற்று ஹோம, அபிஷேக பிரசாதங்கள் பெற்று சென்றனர். இந்த தகவலை தன்வந்திரி
குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment