Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, August 7, 2018

Vastu Santhi Homam (22.08.2018).....


வாஸ்து நாளில் தன்வந்திரி பீடத்தில்

வாஸ்து தோஷ பரிஹார ஹோமங்கள்

தன்வந்திரி பீடத்தில் வாஸ்து பகவான் :

தன்வந்திரி பீடத்தில் வாஸ்து நாட்களிலும், வளர்பிறை பஞ்சமி நாட்களிலும் வாஸ்து சாந்தி ஹோமமும், நிவர்த்தி பூஜை மற்றும் பஞ்சபூத வழிபாடும் அஷ்டதிக் பாலகர் பூஜையும் நடைபெறுகிறது. பீடத்தில் வாஸ்து பகவான் 6 அடி விட்டத்தில் ஈசான்ய மூலையில், பஞ்ச பூதங்களுடன், அஷ்டதிக் பாலகர்களுடன் தலை பாகத்தில் சிவ பெருமான் தீர்த்த கமண்டலத்துடனும், வயிற்று பாகத்தில் பிரம்மாவுடனும், திருவடி விஷ்ணு ரூபமாகவும், ஆகாயத்தை நோக்கி படுத்த வண்ணம் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் அமைப்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

வஸ்துவில் இருந்து வந்தது தான் வாஸ்து :

வாஸ்து என்கிற வார்த்தைக்கு வஸ்து என்று பொருள். வஸ்து என்பது நாம் வசிக்கும் பூமி, நிலம் மற்றும் அதில் உள்ள பொருகளாகும். வஸ்துவில் இருந்து வந்தது தான் வாஸ்து எனலாம்.

பூமி, நிலம் போன்ற பொருள்களில் இருந்து கிடைக்கும் மண், கல், சிமெண்ட், இரும்பு, மரம் போன்ற வஸ்துக்களை கொண்டு, நாம் நமக்காக இருப்பிடம் அமைத்து கொள்ள விரும்பும் போது நாம் பார்ப்பது தான் வாஸ்து சாஸ்திரம் ஆகும்.

அந்தகன் என்கிற அசுரன், சம்காரம் செய்யப்பட்ட காலத்தில், சிவபெருமானின் நெற்றியிலிருந்து விழுந்த வியர்வைத் துளி பூமியில் விழுந்து மீண்டும் ஓர் அசுரனாக மாறி பூமியை விழுங்க முற்பட்டபோது, சிவபெருமான், வீரபத்திரரை அனுப்பி அந்த அசுரனை கீழே தள்ளச்செய்து, அவன் மீது பிரம்மன் முதலான 53 தேவதைகளை வசிக்கும்படி பணித்தார். அவனது கோரப்பசி தீர்வதற்காக, உலக வடிவமான பூசணிக்காயை உணவாகக்கொடுத்தார்.

வாஸ்து சாந்தி :

அந்த அரக்கன்தான் வாஸ்து புருஷன். வாஸ்து புருஷனையும் அவரது அதிதேவதையான பிரம்ம தேவரையும், சக்திகளையும் பூஜித்து ஏனைய தெய்வங்களையும் வழிபட்டு திருப்தி செய்வதே வாஸ்து சாந்தியாகும்.

வாஸ்து தோஷத்தினால் ஏற்படும் அறிகுறிகள் :

சிலரது வீட்டில் உள்ள ஆண், பெண்களுக்கு திருமணம் தடைபெறும். சிலரது வீட்டில் உள்ள தம்பதிகளுக்கு சந்தான பிராப்தி தடைபெறும். சிலரது வீட்டில் உள்ள நபர்களுக்கு அடிக்கடி வியாதிகள் வருவதும், விபத்துக்கள் நடைபெறுவதுமாக இருக்கும். சிலரது வீடடில் உள்ள நபர்கள், நல்ல நபர்களாக இருந்து பின்பு தேவையற்ற தீய பழக்கங்களுக்கு ஆளாகி குடும்பம் மிகவும் வேதனைப்படும். சிலரது வீட்டில் லக்ஷ்மி கடாக்ஷம் என்றால் என்ன என்பார்கள். சிலரது வீட்டில் உள்ள ஆண், பெண்கள் காம மோகத்தால், காதல்வயப்பட்டு வேற்று மதத்தினரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்துவர்.

வாஸ்து தோஷத்தினால் ஏற்படும் தடைகள் :

சிலரது வீட்டில் குடிப்பதற்கு கூட குடிநீர் கிடைக்காமல் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். சில குடும்பத்தில் வீடு கட்டுதல், மனை வாங்குதல், தொழில் துவங்குவதல், விவசாயம் செய்தல், வீடு பழுது பார்த்தல், நகை வாங்குதல், போன்ற எந்த விதமான செயல்களில் இறங்கினாலும் அதில் பல்வேறு வகையான தடைகள் ஏற்படுதல். சிலரது வீட்டில் சமைப்பது என்பது கேள்விக் குறியாகும். சிலரது வீட்டில் பிள்ளைகள் பெற்றோரின் வார்த்தைகளுக்கு மதிப்பு அளிக்க மட்டார்கள். சிலரது வீட்டில் குடும்ப தலைவனோ, குடும்ப தலைவியோ வசிக்க மாட்டார்கள். சிலரது வீட்டில் அடிக்கடி பொருட்கள் திருடு போவதும், தீ விபத்து ஏற்படுவதுமாக இருக்கும். சிலரது வீடடில் எவ்வளவு பாடுபட்டாலும் செல்வம் சேரவே சேராது. சிலரது வீட்டில் துர்மரணங்கள் ஏற்படும். இன்னும் சிலரது வீடடில் தேவை இல்லாமல் பிரச்சனை வந்துகொண்டே இருக்கும். இது போன்ற பல்வேறு காரணங்களை நாம் கூறிக்கொண்டே செல்லலாம். இதற்கான முக்கிய காரணம் ஜாதக தோஷம் மட்டுமின்றி வாஸ்து பிரச்சனையாக கூட இருக்கலாம். இது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட நமக்கு பெரிதும் உதவி புரிவது வாஸ்து பகவானும், பரிகார பூஜைகளும் ஒருவகை நிவர்த்தி மார்க்கமாகும்.

வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமமும், வாஸ்து பகவானுக்கு சாந்தி பூஜைகளும் :

மேற்கண்ட தோஷங்களில் இருந்து விடுதலை பெற வருகிற 22.08.2018 புதன்கிழமை காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை, வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வாஸ்து தோஷங்களால் ஏற்படும் தடைகள் குறையவும், பூர்ண வாஸ்துப்படி நாம் வாழும் இடங்களை மாற்றி அமைத்து கொள்ளவும். வாஸ்து பிரச்சனைகளால் ஏற்படும் போராட்டங்கள் நீங்கி மன உளச்சலில் இருந்து வெளியேறி வாழ்க்கை பிரகாசமாக வாழ வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமமும் வாஸ்து பகவானுக்கு சாந்தி பூஜைகளும் கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நிகழ்த்த உள்ளார்.

வாஸ்து சாந்தி பரிகார ஹோமம் :

வாஸ்து  சாஸ்திரம் முக்கியமாக ஒரு சரியான திசையில் ஒரு கட்டிடம் வடிவமைத்தல் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு பண்டைய கட்டிடக்கலை அறிவியல். அது பெரும் நன்மைகளை பெற வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஒரு பொருத்தமான ஒன்றாகும். இந்த தொழில் நுட்பம் கூட கட்டிடங்களில் வடிவமைத்தல் மற்றும் மறுவடிவமைப்பதில் அறைகள் வாழ்க்கையில் செழிப்பு, செல்வம் மற்றும் மகிழ்ச்சியை கொண்டு அனுமதிக்கிறது. வாஸ்து சாந்தி பரிகார ஹோமம் முக்கியமாக ஒரு பயனுள்ள முறையில் எதிர்மறை ஆற்றல் அகற்றுவதன் மூலம் புதிய கட்டிடங்கள் நிலைமைகளை மேம்படுத்த உதவும்.

ஒரு வெற்றிகரமான வாழ்க்கை வாழ பிரச்சனைகள் பல்வேறு வகையான மீள்வதற்கும் முறைகளை வழங்குகிறது. ஒரு கட்டிடத்தில் வாஸ்து குறைபாடுகள் ஒரு நபர் பல குழப்பங்களும் ஏற்படலாம். வாஸ்து சாந்தி பரிகார ஹோமம் முக்கிய மாற்றங்கள் சாட்சியாக ஒழுங்காக அவற்றை தீர்ப்பதற்கான ஒரு பொருத்தமான ஒன்றாகும். வாஸ்து சாந்தி பரிகார ஹோமம் சரியான தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் குடும்பத்தில் உள்ள உறவுகளை மேம்படுத்த முடியும்.

வாஸ்து ஹோம பிரசாதம் :

இந்த ஹோமத்தில் வைக்கப்பட்ட செங்கல், வாஸ்து யந்திரம், மச்ச யந்திரம், வாஸ்து மண் வாஸ்து தேங்காய்,வாஸ்து பொம்மை மற்றும் வாஸ்து நிவர்த்தி பொருட்களை விரும்பும் பக்தர்களுக்கு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருள்  பிரசாதம் வழங்கி ஆசீர்வாதம் செய்கிறார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

No comments:

Post a Comment