Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, August 9, 2018

Swarna Kala Bhairavar Laksharchana (08.08.2018)......


சொர்ண கால பைரவர் ஹோமத்துடன்லட்சார்ச்சனை நடைபெற்றது.


ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சிறப்பு :
உலகில் வாழ்ந்து வரும் மாந்தர்கள் அனைவரையும் அவரவர் முற்பிறவி கர்மாக்களின் விதிப்படி படைத்தல், காத்தல், அழித்தல் செய்து வருபவர்கள் முறையே பிரம்மன், விஷ்ணு, ருத்ரன் ஆவார்கள். இந்த மும்மூர்த்திகளையும் அந்த சதாசிவன் சார்பாக நிர்வாகித்து வருபவர் தான் ஸ்ரீ காலபைரவர்.

ஸ்ரீகால பைரவரின் உயர்ந்த அவதாரமே ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் அவதாரமாகும். ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவரை பழங்காலத்தில் தமது பொக்கிஷ அறையில் ஸ்தாபித்து, வழிபட்டு வளமோடும், வலிமையோடும் வாழ்ந்தவர்கள் தான் சேர, சோழ, பாண்டிய மன்னர்களும் மற்றும் ஏராளமான குறுநில மன்னர்களும் சகல சம்பத்துக்களோடும் வாழ்ந்து வந்துள்ளனர்.

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சிறப்பான ஒரு தனி ஆலயம் :

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சிறப்பான ஒரு தனி ஆலயம் அமைக்கப்பட்டு பிரதி மாதம் அஷ்டமிகளிலும், பௌர்ணமி நாட்களிலும் திருவாதிரை நக்ஷத்திரத்திலும் சிறப்பு பூஜைகளும், ஹோமங்களும், அஷ்டோத்தரங்களும், ஸஹச்ர நாம அர்ச்சனைகளும், பணம் தரும் பைரவரான ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவருக்கு பக்தர்களின் நலம் கருதி நடைபெற்று வருகிறது. பக்தர்கள் விரும்பும் நாட்களிலும் சிறப்பு யாகங்கள் இங்கு நடைபெற்று வருகிறது.

ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதிகயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி நேற்று 08.08.2018 புதன்கிழமை ஆடி திருவாதிரை நக்ஷத்திரத்தில் மாலை 3.30 மணி முதல் 7.30 மணி வரை சொர்ண பைரவர் யாகம், மஹா அபிஷேகத்துடன் லட்சார்ச்சனை நடைபெற்றது.

சொர்ண புஷ்பத்துடன் 1008 தாமரை 1008 வில்வ இதழ்களை கொண்டு ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு பக்தர்களின் பல்வேறு தேவைகள் பூர்த்தியாவதிற்காக சொர்ண பைரவருக்கு யாகம், அபிஷேகம், லட்சார்ச்சனை நடைபெற்றது.

இதில் வெல்லக்கட்டிகள், மஞ்சள் பட்டுத்துண்டுகள், மண் அகல்விளக்கு, சுத்தமான பசுநெய், சந்தனம், வாசம் தரும் ஊதுபத்தி, அரைக்கப்பட்ட சந்தனம், வாழை இலை, மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், சுக்கு, மிளகு, நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், செவ்வரளி மாலை, தாமரை புஷ்பங்கள், வில்வம், முந்திரி, திராட்சை, வஸ்திரங்கள் யாக பூஜைகளில் சேர்க்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.







No comments:

Post a Comment