Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, August 15, 2018

72nd Independence Day, Garuda Homam, Bharatha Mata Homam, Hayagreever Homam...


தன்வந்திரி பீடத்தில் 72 வது சுதந்திர தினவிழா - பாரதமாதா ஹோமம் – கருட ஹோமத்துடன் கல்வி ஹோமங்கள் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் இன்று 15.08.2018 புதன்கிழமை காலை 6.00 மணிக்கு நாதஸ்வர மங்கள இசையில் துவங்கி, கோ பூஜை, யாகசாலை பூஜை, ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்ரீதன்வந்த்ரி ஹோமம், ஸ்ரீ ம்ருத்யஞ்ஜ ஹோமம், ஸ்ரீ லஷ்மிநரசிம்மர் ஹோமம், ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி ஹோமம், ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர், ஸ்ரீ வித்யா கணபதி ஹோமங்கள், பாரத மாதா ஹோமம், கருட ஹோமம், நடைபெற்றது.

72 வது சுதந்திர தினவிழா முன்னிட்டு கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் சுதந்திர தினக் கொடியேற்றினார். மேலும் பாரத மாதாவிற்கு சிறப்பு ஹோமமும், அபிஷேகமும் நடைபெற்றது.

அரும்பாடுபட்டு நம் முன்னோர்கள் நமக்காக பெற்று தந்த சுதந்திரத்தை பேணிக் காப்பது  ஒவ்வொருவருடைய கடமையாகும். அந்த வகையில்  கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பாரதத் தேசத்தின் மீது அளவில்லாத பற்றுதலின் காரணமாகவும், பாரத மாதாவின் மீதுள்ள அளவுகடந்த பக்தியின் காரணமாகவும்,  இதுவரை எங்கும் பார்த்திராத வகையில் பீடத்தின் நுழைவு பகுதியிலேயே நம்மையெல்லாம் பாரமாக நினையாமல் பெற்ற குழந்தைகளாக பாதுகாத்திடும் பூமித்தாய் என்கிற அன்னை பாரதமாதாவையும் பிரதிஷ்டை செய்துள்ளார். இங்கே தேச நலமே தேக நலம், தேக நலமே தேச நலம் என்ற தாரக மந்திரத்துடன் தினசரி பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது.

கர்மவினை தீர்க்கும் கருட ஹோமம்

மற்றவர்களுக்கு தீங்கிழைப்பவர்கள், தாங்கள் செய்த தீமையின் பலனை இறந்த பின்பு அனுபவிப்பார்கள். எந்தத் தவறுக்கு என்ன தண்டனை என்பதை கருடனுக்கு இறைவன் போதித்ததே 'கருட புராணம்' ஆகும்.

தன்வந்திரி பீடத்தில் அஷ்டநாக கருடன் :

பெரிய திருவடி என்று போற்றபடுவர் ஸ்ரீகருடாழ்வர். ஸ்ரீதன்வந்திரி பகவானை தரிசித்தபடி, 4 அடி உயரத்தில் நின்ற கோலத்தில், தம் உடலில் அஷ்ட நாகங்களை தரித்து அவருக்கே உரிய அழகுடன் சிறப்பா காட்சி தருகிறார். இவர் விஷ ந்துக்களால் ஏற்படும் ஆபத்துக்ளை தவிர்க்கும் வகையிலும்,  பஞ்சபக்ஷி தோஷங்கள், சர்ப்ப தோஷங்கள் போன்றவைகளால் ஏற்படும் தடைகளை விலக்கும் விதமாக ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் அஷ்ட நாக கருட பகவானுக்கு கருட ஹோமத்துடன், கருட பகவானுக்கு தேன் அபிஷேகம் மாலை 5.00 மணிக்கு நாக சதுர்த்தி, ஸ்ரீ கருட ஜயந்தி, கருட பஞ்சமியை முன்னிட்டு நடைபெற்றது. இந்த யாகத்தில் நவக்கிரக சமித்துக்கள், சீந்தில் கொடி, மிளகு, மருதாணிவிதை, அருகம்புல், ஓமம், வலம்புரி, வசம்பு, கருடகொடி, நல்லெண்ணெய், தேன், நெய், வெண்பட்டு, மோதகம்,  சேர்க்கப்பட்டது.

மாணவ, மாணவியர்களின் கல்வித் தரம் உயர
மாபெரும் ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி ஹோமத்துடன்
ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர், ஸ்ரீ வித்யா கணபதி யாகங்களும் இன்று நடைபெற்றது.

பயிலும் மாணவ மாணவிகளுக்கு பலவிதமான இடையூறுகள், தேவையற்ற பழக்க வழக்கங்கள் ஏற்பட்டு கல்வியில் நாட்டம் குறைதல், ஞாபக மறதி போன்றவைகளால் கல்வியில் பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்த நோயை போக்கும் விதமாக ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர், ஸ்ரீ வித்யா கணபதி போன்ற ஹோமங்கள் நடைபெற்றது.

இதில் ஞானம், கல்வி, வித்தை, குரு கடாட்சம், சுபயோகம், ரோகமின்றி நல்ல உடல் ஆரோக்கியம், கிரக தோஷமின்றி வாழவும், மேலும், பல நல்ல பலன்களை பெற உதவும் வகையிலும் மாணவ, மாணவியர்கள் கல்வியில் தேர்ச்சி பெறவும், உலக அமைதிக்காகவும், நன்மைக்காகவும் பிரார்த்தனைகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கும், மாணவ மாணவிகளுக்கும் யாகத்தில் வைத்து பூஜித்த இனிப்புகள், நோட்டு புத்தகங்கள், பழங்கள், பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் ஏராளமானவர் பங்கேற்று சிறப்பித்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.















No comments:

Post a Comment