16 கால் மண்டம் திறப்பு விழா
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசியுடன் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் 16 கால் மண்டம் திறப்பு விழா நேற்று 3.4.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் நடைபெற்றது.
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 24.06.2010 ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி தேவிக்கு ஆலயம் அமைத்து விக்கிரகம் பிரதிஷ்டை ஏராளமான ஆர்ய வைஸ்ய குடும்பத்தினர்கள் வேண்டுகோள் ஏற்று ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் திருக்கரங்களால் பொதுமக்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து 10.07.2015-ம் ஆண்டு தமிழக முன்னாள் ஆளுநர் K.ரோசய்யா அவர்களின் திருக்கரங்களால் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரிக்கு மண்டபம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை எனும் அடிக்கல் நாட்டு விழா முக்கியஸ்தர்கள் ஆர்ய வைஸ்ய சமூகத்தின் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. மேற்கண்ட திருப்பணி 16 கால் கொண்டு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரிக்கு மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு நேற்று 3.4.2022, ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் திரு P.சேஷாத்திரி, GENERAL SECRETARY, INTERNATIONAL VAISH FEDERATION, TAMIL NADU & SOUTHERN INDIA VYSYA ASSOCIATION, திரு. நாராயண குப்தா, முன்னாள் தலைவர், ஆர்ய வைஸ்ய மஹா சபா, சென்னை, திரு. சந்திரசேகர். விவேக் & கோ உரிமையாளர், சென்னை, திரு. காடி P.சீனிவாஸ், பெங்களூர், திரு சங்கமேஸ்வரன், பெங்களூர், திரு கணேஷ், திருச்சி, திரு புருஷோத்தமன், கரூர், திரு, முருகானந்தம், கரூர், திரு ராஜசேகர், ஊட்டி போன்ற 30க்கு மேற்பட்ட தொழிலதிபர்களும் ஆர்ய வைஸ்ய குடும்பத்தினர்களும் தன்வந்திரி பக்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசுடன் புது கணக்கு துவங்க ஸ்ரீ லக்ஷ்மி குபேர சன்னதியில் வைத்து பூஜிக்கப்பட்ட நோட்டு புத்தகங்கள் மற்றும் தன்வந்திரி பிரசாதத்துடன் அன்னப் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment