ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அன்னபூரணி தேவிக்கு அன்னப்படையல் வைபவம்
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்ப்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 4 அடி உயரமுள்ள தங்க அன்னபூரணி தேவிக்கு பிரதி மாதம் பௌர்ணமி, அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமை போன்ற தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது அந்த வகையில் வசந்த நவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ அன்னப்பூரணி தேவியின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டி வருகிற 5.4.2022, செவ்வாய்கிழமை காலை 11.00 மணி அளவில் அன்னபூரணி ஹோமமும், அபிஷேகமும், சிறப்பு ஆராதனையும் செய்து சாதம், பருப்பு, நெய், பாயாசம், வடை, அப்பளம் போன்ற 60 வகையான உணவுப்பொருட்களை கொண்டு அன்னபூரணி தேவிக்கு அன்னப்படையல் வைபவமாக அன்னபூரணி சன்னதியில் நடைபெற உள்ளது.
மேற்படி பூஜைகள் குடும்பத்தில் பசி, பட்டினி, நோய், வறுமை மற்றும் தரித்திரம் நீங்கவும், விவசாயம் வளர்ச்சி பெறவும், விவசாய பெருமக்கள், வியாபார பெருமக்கள் ஆரோக்யமாக வாழவும், பொருளாதார நிலை மேம்படவும், அன்னதோஷம் விலகவும் உணவு தோஷத்தினால் ஏற்படும் நோய்கள் விலகவும், துன்பங்கள் நீங்கவும். உண்ணும் உணவிற்கு தேவியாக இருக்கும் அன்னபூரணியை வேண்டி உணவிற்கு பஞ்சம் ஏற்படாமல் இருக்கவும், ஆண், பெண் திருமணம் தடைகள் நீங்கவும் அன்னப்படையல் வைபவம் தன்வந்திரி பீடத்தில் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment