ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் புதிய தீர்த்தகுளம் வெள்ளோட்டம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி 11.04.2022 திங்கட்கிழமை மங்கள சண்டி யாகம், வருண ஜப யாகம் நடைபெற்றது அதனை தொடர்ந்து புதியதாக அமைக்கப்பட்டு வருகின்ற ஸ்ரீ தன்வந்திரி தீர்த்த குளத்திற்கு தண்ணீர் நிரப்புதல் பூஜை நடைபெற்றது.
விரைவில் தன்வந்திரி பீடத்தில் சஞ்சீவினி தீர்த்த குளம் திறப்பு.
50 அடி நீளம், 50 அடி அகலம் 13 அடி ஆழத்தில் குளம் அமைக்கப்பட்டு வருகிறது, நடுவில் 6 x13 என்ற அளவில் நீராழி மண்டபம் அமைத்து தண்ணீர் நிரப்புதல் பூஜை செய்யப்பட்டது. இதில் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திரு.தெ. பாஸ்கர பாண்டியன் குடும்பத்துடன் கலந்து கொண்டு கங்கா பூஜை செய்தனர். முதலில் ஸ்ரீ தன்வந்திரி விநாயகர் பூஜை, ஸ்ரீ துர்கா பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமிகள் ஆசிபெற்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment