மங்கள வாழ்வு தரும் ஸ்ரீமகிஷாசுரமர்த்தினிக்கு
41 நாட்கள் தொடர் மஹா அபிஷேகம் இன்று துவங்கியது.
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இன்று 23.4.2022 சனிக்கிழமை அக்னி நக்ஷத்திரத்தின் தாக்கம் குறையவும், மழை வேண்டியும், இயற்கை வளம் வேண்டியும், மரண பயம் நீங்கவும், மாங்கல்ய தோஷம் அகலவும், திருமணம் பாக்கியம் கைகூடவும், சந்தானம் பாக்கியம் பெறவும், தொழில் வியாபாரம் சிறக்கவும், தன ஆகர்ஷண மற்றும் ஜன ஆகர்ஷண பெருகவும், சகலவிதமான பயங்கள், தோஷங்கள் விலகி வாழ்க்கையில் வெற்றிகளை பெறவும், சர்வ மங்களம் பெற்று மங்கள வாழ்வு பெறவும் ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினிக்கு மஹா அபிஷேகம் இன்று முதல் 41 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள், பொது மக்கள் கலந்து கொண்டு இவ்விழாவை துவக்கி வைத்தனர். இந்த அபிஷேகம் 3.6.2022 வெள்ளிக்கிழமை வரை 41 நாட்கள் தினமும் காலை முதல் மாலை வரை ஹோம பூஜைகளுடன் தொடர் அபிஷேகம் நடைபெறும். மேலும் நாளை முதல் ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு 33 நாட்கள் (24.4.2022 முதல் 26.5.2022 வரை) தொடர் திருமஞ்சன திருவிழா நடைபெற உள்ளது. இங்கு நடைபெறும் ஹோமம், அபிஷேகம், மற்றும் பூஜைகளில் பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு இறையருள் பெறுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment