தமிழகம், ஆந்திரம், புதுச்சேரி & கர்நாடகம் மாநிலங்களுக்கு
அஷ்ட புஜ மரகத ஸ்ரீ ராஜ மாதங்கி சிலை கரிக்கோல பவனி
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று 24.4.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணியளவில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசியுடன் 5 அடி உயரமும் 3 அடி அகலமும் உள்ள அருள்மிகு அஷ்டபுஜ மரகத ஸ்ரீ ராஜமாதங்கி சிலை கரிக்கோல பவனி துவக்க விழா நடைபெற்றது. இதில் இராணிப்பேட்டை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் வாலாஜாபேட்டை காவல் நிலைய ஆய்வாளர் பங்கேற்று சிறப்பித்தனர். இச்சிலை மேற்கண்ட இடங்களுக்கு 25.4.2022 முதல் 12.5.2022 வரை கரிக்கோல பவனி வரவுள்ளது. இப்பவனியில் தன்வந்திரி குடும்பத்தினர், உபயதாரர்கள், முக்கியஸ்திரர்கள் இடங்களுக்கு செல்ல உள்ளது. ஆங்காங்கே பக்தர்கள் திருக்கரங்களால் பூஜைகள் நடைபெற்று பின்னர் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 3.6.2022 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment