தன்வந்திரி பீடத்தில் நோய் தீர்க்கும் ஔஷத்துடன்
அமாவாசை யாகம் 31/03/2022
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நாளை 31.03.2022 வியாழக்கிழமை அமாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்,
அமாவாசை பூஜை
நாளை 31.03.2022 வியாழக்கிழமை அமாவாசை திதியை முன்னிட்டு காலை 10.30 மணியளவில், சரப சூலினி ப்ரத்யங்கிரா ஹோமத்துடன் கண் திருஷ்டிகள் நீங்க மிளகாய் வற்றல் கொண்டு திருஷ்டி துர்கா ஹோமம் நடைபெற உள்ளது. அமாவாசையில் நடைபெறும் பூஜைகள் மற்றும் ஹோமத்தில் பங்கு கொள்வதால் சந்ததியினர் தோஷம் இல்லாமல் நலமுடன் வாழ வழி செய்கிறது. பித்ருக்களை நினைவுகூர்ந்து நாம் செய்யும் வழிபாடுகள், தர்ம காரியங்கள் ஆகியவை அந்த ஆத்மாக்களுக்கு மகிழ்வளிக்கும் செயலாகும். இதனால்,அவர்களது பரிபூரண ஆசி நமக்கும் நம் சந்ததிக்கும் கிடைக்கும். துர்மரணம், விபத்து, அகால மரணம் அடைந்தவர்கள் ஆத்மா சாந்தியடைந்து முக்தி கிடைக்கப் பெறுவார்கள்.
செய்வினை கோளாறுகள்
ஒரே வீட்டில் இருவருக்கு இராகு தசை அல்லது கேது தசை நடப்பவர்களுக்கு ஏற்படும் சங்கடங்கள் தீரவும், நாக தோஷம், சர்ப்ப தோஷம், செய்வினைக் கோளாறுகள் நீங்கவும், பில்லி சூன்யம் போன்ற தோஷங்கள் அகலவும், திருமணம் கைகூடவும், சந்தான பிராப்தம் கிடைக்கவும், தொழில்களில் ஏற்படக் கூடிய தடைகள் அகலவும், பணப் பிரச்சனை, கடன் பிரச்சனை தீரவும், எதிரிகள் தொல்லை அகலவும், மரண பயம் நீங்கவும்,அகால மரணம் நிகழாமல் இருக்கவும், மாங்கல்ய தோஷம் அகலவும் இந்த யாகம் நடைபெறுகிறது.
மழைவளம் பெருகும்
மேலும் மண் வளம், மழை வளம் பெருகி இயற்கை வளம் பெறவும், பஞ்ச பூதங்களினால் ஏற்படும் இன்னல்கள் அகலவும் மேற்கண்ட ஹோமங்கள் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடக்கவிருக்கிறது. இதனை தொடர்ந்து மகிஷாசுரமர்த்தினி, ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகமும், ஔஷதம் மற்றும் அன்னப்பிரசாதம் ஸ்வாமிகளின் திருக்கரங்களால் வழங்கப்பட உள்ளது. இதில் அனைவரும் பங்கு கொண்டு பித்ருக்களின் ஆசிகளையும், ஸ்ரீ துர்கா தேவியின் அருளையும் பெற்று, பெரு வாழ்வு வாழலாம் என்று ஸ்தாபகர் டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவிக்கிறார்.
மேலும் விவரங்களுக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
கீழ்புதுபேட்டை, வாலாஜாபேட்டை.
தொலைபேசி : 04172-294022 / 09443 330203
No comments:
Post a Comment