அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் குறையவும் மழை வேண்டியும், இயற்கை வளம் வேண்டியும் ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு 33 நாட்கள் தொடர் திருமஞ்சன திருவிழா நாள் 24.4.2022 முதல் 26.05.2022 வரை நடைபெறுகிறது
https://tamil.oneindia.com/astrology/agni-nachatram-special-tirumanjanam-festival-to-lord-sri-dhanvanthri-455506.html
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு" டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி, அக்னி நக்ஷத்திரத்தின் தாக்கம் குறையவும், மழை வேண்டியும், இயற்கை வளம் வேண்டியும், உலக மக்கள் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழவும் வருகிற 24.04.2022 ஞாயிற்றுக்கிழமை முதல் 26.05.2022 வியாழக்கிழமை வரை 33 நாட்கள் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு மஹா தன்வந்திரி ஹோமத்துடன் தொடர் திருமஞ்சன திருவிழாவுடன் லக்ஷார்ச்சனை, புஷ்பாஞ்சலி வைபவங்கள் நடைபெறுகிறது. தினமும் காலை 11.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மிக்கு லக்ஷார்ச்சனையும் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து 26.05.2022 வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை புஷ்பாஞ்சலியும், அன்னப்பாவாடை உற்சவமும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் அனைவரும் பெயர், நக்ஷத்திரம், கோத்திரம் தெரிவித்து இறை பிரசாதம் பெறலாம்.
தொடர்புக்கு
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை - 632 513. இராணிப்பேட்டை மாவட்டம்.
தொலைபேசி : 04172 - 294022, செல் – 94433 30203
No comments:
Post a Comment