Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, January 30, 2020

Bhagwan Mahaveer - Sri Agasthyar - Sri Ramakrishna Paramahamsar Aalaya Punar Prathishta


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்பகவான் மஹாவீரர், ஸ்ரீ அகத்தியர், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஆலய புனர் பிரதிஷ்டை நடைபெற்றது.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இன்று 30.01.2020 வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் 11.30 மணி வரை பகவான் மஹாவீரர், ஸ்ரீ அகத்தியர், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஆலயங்களின் புனர் பிரதிஷ்டா வைபவமும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
காலை மங்கள இசையுடன் கோ பூஜை, வேத பாராயணங்களுடன் யாகசாலை பூஜை நடைபெற்று, மஹா கணபதி ஹோமம், கலச பூஜை, மஹாவீரர் அகஸ்தியர் மற்றும் ரமகிருஷ்ண பரமஹம்ஸர் நெய், தேன், மூலிகைகள், சமித்துகள், பழங்கள், நிவேதன பொருட்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் கொண்டு மூலமந்திர ஹோமம், ருத்ர ஹோமத்துடன் மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து யாத்ரா தானமும், கலசபுறப்பாடும் கலசாபாபிஷேகமும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.















Monday, January 27, 2020

71st Republic Day Celebration

Special Homam for Ayodhya Rama Temple

at Sri Danvantri Arogya Peedam, Walajapet.

Thanks to "Maalai Malar, Sakshi" Daily News Papers.



Sunday, January 26, 2020

71st Republic Day - Pattabhisheka Ramar Homam - Bharath Matha Homam - Vastu Homam - Sanjeevi Anjaneyar Homam


அயோத்தியில் விரைவில் ராம ஆலயம் அமைய வேண்டிஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ளஸ்ரீ பாரத மாதா, ஸ்ரீ வாஸ்து பகவான், ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் மற்றும் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயருக்குசிறப்பு பூஜைகள் மற்றும் கூட்டுபிரார்த்தனைகள்71 ஆவது குடியரசு தினத்தில் நடைபெற்றது.

இராணிப்பேடை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் குடியரசு தினம் மற்றும் வாஸ்து நாளை முன்னிட்டு இன்று 26.01.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை குடியரசு தின கொடியேற்றமும், அயோத்தியில் விரைவில் ராம ஆலயம் அமைய வேண்டி ஸ்ரீ பாரத மாதா, ஸ்ரீ வாஸ்து பகவான், ஸ்ரீ பட்டாபிஷேக ராமர், ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் சிறப்பு ஹோமங்களும், அபிஷேகங்களும் நடைபெற்று, தங்க முலாம் பூசபட்ட வாஸ்து யந்திரம், மச்ச யந்திரம், நவரத்தினம் மற்றும் பஞ்ச லோஹ தகிடுகளுக்கு பக்தர்கள் அயோத்தியில் ராமர் ஆலயம் விரைவில் அமைய வேண்டி பிரார்த்தனையுடன் ராம நாம ஜபத்துடன் தங்கள் கைகளால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதில் தமிழ்நாடு விஸ்வ இந்து பரிக்ஷத் துணை தலைவர் திரு. M.J. துளசிராம் மற்றும் அவர் குடும்பத்தினர்கள், சிப்காடு நவசபரி ஆலய நிர்வாகி திரு. ஜெயச்சந்திரன், ஆரிய சமாஜம் பிரச்சாரக் திரு. கண்ணன் ஜி அவர்கள், வேலூர் சிருஷ்டி ஸ்கூல் காரியதர்சி திருமதி. பூர்ணிமா பிரசன்னா, ISRO சங்கர், கரூர் வாஸ்து ஜோதிடர் திரு. முத்துராஜா, M.S. ஸ்க்ரீன்ஸ் சேதுராமன், சென்னை தொழில்  ஆலோசகர் திரு. ராமநாதன் குடும்பத்தினர், மலேசியா திரு. பழனிசாமி செட்டியார் விஸ்வநாதன், தர்மபுரி திரு. R.மணி குடும்பத்தினர், திருநெல்வேலி திரு. நாகமணி, திரு. திருமுருகன் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.


























Saturday, January 25, 2020

365 Days - 365 Homam - 25th Day Sani Santhi Homam...


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
365         நாள் – 365 ஹோமம் - 25வது நாள்
சனி சாந்தி ஹோமம்.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன்  உலக மக்கள் நலன் கருதியும், உலக க்ஷேமத்திற்காகவும் சென்ற  26.04.2012  முதல்  25.05.2013 வரை நடைபெற்ற 365 நாள்    365 யாகம், ஏகோபித்த பக்தர்கள் வேண்டு கோளுக்கிணங்க இரண்டாவது முறையாக 01.01.2020 புதன்கிழமை மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து 25வது நாளான இன்று 25.01.2020 சனிக்கிழமை சனி சாந்தி ஹோமம் நடைபெற்றது. இதில் ஆயுள் விருத்தி பெறவும், ஏழரை சனி, அஷ்டம சனி, கண்ட சனி, ஜன்ம சனி நீங்கவும் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஸ்ரீ சனிஸ்வரருக்குரிய பூக்கள், திரவியங்கள், மூலிகை பொருட்கள், பழங்கள், வஸ்திரங்கள் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ பாதாள சொர்ண சனிஸ்வரர் மற்றும் ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் 26வது நாளான நாளை 26.01.2020 ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உள்ள கஷ்டங்கள் நீங்கவும், மாங்கல்ய பாக்கியம் பெறவும், சொந்த வீடு அமையவும், நஷ்டத்தில் நடைபெறும் தொழில், வியாபாரம், விவசாயம் போன்ற பல செயல்களில் வளமை பெறவும், மனையில் வீடு கட்டும் தடைகள் நீங்கவும் மற்றும் பல நன்மைகள் பெறவும்  வாஸ்து ஹோமமும் சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது. இவ்வைபவம் வருகிற 31.12.2020  வரை  நடைபெற உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.






Republic Day 2020 - Vastu Day


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்அயோத்தியில் விரைவில் ராமர் ஆலயம் அமையவாஸ்து நாள் – குடியரசு தினம் முன்னிட்டுகொடியேற்றுதல்வாஸ்து புருஷன் – பாரத மாதா - பட்டாபிஷேக ராமர் மற்றும் சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு சிறப்பு யாக பூஜைகள், கூட்டுபிரார்த்தனைகள் நடைபெறுகிறது.

இராணிப்பேடை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் குடியரசு தினம் மற்றும் வாஸ்து நாளை முன்னிட்டு நாளை 26.01.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை குடியரசு தின கொடியேற்றமும், அயோத்தியில் விரைவில் ராம ஆலயம் அமைய வேண்டி ஸ்ரீ பாரத மாதா, ஸ்ரீ வாஸ்து பகவான், ஸ்ரீ பட்டாபிஷேக ராமர், ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் சிறப்பு ஹோமங்களும், அபிஷேகங்களும், சொர்ணம் பூசபட்ட வாஸ்து யந்திரம், மச்ச யந்திரங்களுக்கு விசேஷ பூஜைகளும் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து நடைபெறும் கூட்டு பிரார்த்தனையில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று பிரார்த்தனை செய்ய உள்ளனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
குறிப்பு : வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ தன்வந்திரி மூலவருடன் 78 பரிவார தெய்வங்களுக்கும் சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களும் திருச்சன்னதிகள் அமைந்துள்ளன. நாளை வாஸ்து நாள், குடியரசு தினம் முன்னிட்டு சிறப்பு பூஜைகளாக பட்டாபிஷேக ராமர், சஞ்சீவி ஆஞ்சநேயர், பாரத மாதா, வாஸ்து பகவான் போன்ற தெய்வங்களுக்கு ஹோமங்கள், அபிஷேகங்கள் நடைபெறுகிறது.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
இராணிப்பேட்டை மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203