Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, July 29, 2013

கார்த்திகை குமரனுடன் கார்த்திகை பெண்கள்

ஜூலை 30, 31, 2013 ஆடிகிருத்திகையை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சிறப்பு ஹோமங்கள்.

கந்த புராணத்தில் முருகப் பெருமானின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடம் பெறுபவர்கள் கார்த்திகை பெண்கள்.

சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தீப்பொறிகளாகத் தோன்றி சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக முருகப் பெருமான் அவதரித்தார். அந்த ஆறு குழந்தைகளையும் பேணி வளர்த்தவர்கள் கார்த்திகை பெண்கள் அறுவர். பின்னர் ஆறு குழந்தைகளும் பார்வதி தேவியால் ஒருங்கிணைக்கப்பட்டு ஆறுமுகனாக மாறினார். கார்த்திகை பெண்கள் பராமரித்ததால் முருகனுக்குக் கார்த்திகேயன் என்ற பெயரும் உண்டு.

கார்த்திகை பெண்கள் பற்றி நாம் அறிந்த செய்தி, அவர்கள் ஆறு குழந்தைகளாக இருந்த முருகனைப் பேணி வளர்த்தனர் என்பதுதான்.  ரிஷி பத்தினிகளான கார்த்திகை பெண்கள் அறுவர் பெயர்கள் நிதர்த்தனி, அபரகேந்தி, மேகேந்தி, வர்தயேந்தி, அம்பா, துலா என்பவனவாகும். (மேலும் பரணி, கிருத்திகை, ரோகிணி, பூசம், உத்திரம், விசாகம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுவது உண்டு).


இந்தக் கார்த்திகை பெண்கள் அஷ்டமாசித்திகளை உபதேசிக்குமாறு சிவபெருமானை வேண்டினர். சிவபெருமான் சற்று யோசித்தார். அருகிலிருந்த பார்வதிதேவி கார்த்திகைப் பெண்களுக்கு ஆதரவாக அவர்களுக்கு அஷ்டமாசித்திகளை உபதேசிக்குமாறு சிவபெருமானை வேண்டிக் கொண்டாள்.

இதனை ஏற்றுக்கொண்ட சிவபெருமான் அஷ்டமாசித்திகளை அப்பெண்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார். ஆனால், அப்பெண்டிரோ அதைக் கேட்பதில் கவனக் குறைவாக இருந்தனர்.

இதனால் சினமுற்ற சிவபெருமான் அவர்கள் அறுவரையும் பட்டமங்கை என்னும் தலத்தில் கற்பாறைகளாகுமாறு சபித்தார்.
தங்கள் தவறை உணர்ந்த கார்த்திகை மகளிர், சாபத்தை நீக்கியருளும்படி சிவபெருமானிடம் வேண்டினர். அதற்குச் சிவபெருமான் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் மதுரையிலிருந்து குருவாக வந்து சாபவிமோசனம் அளிக்கிறேன் என்றார்.

சொன்னபடியே ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் சிவபெருமான் மதுரையிலிருந்து வந்து கார்த்திகைப் பெண்களுக்கு சாபவிமோசனம் அளித்தார்.

இது பட்டமங்கை சிவத்தல வரலாறு கூறும் செய்தி. அந்தப் பட்டமங்கை இப்போது பட்டமங்கலம் என அழைக்கப்படுகிறது. இது சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடிக்கு அருகில் உள்ளது. இங்கு உள்ள தக்ஷிணாமூர்த்தி கல்லால மரத்தின் கீழ் அமைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட கார்த்திகைப் பெண்களுக்கு வேலூர் மாவட்டம் வாலஜாபேட்டையில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பெற்ற தாய் எந்த அளவுக்கு முக்கியமோ அதைவிட முக்கியம் வளர்ப்புத்தாய் என்று அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்திலும், வளர்ப்புத்தாய்க்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்திலும் முருகப்பெருமானே பார்வதி தேவிக்கு மேலாக கார்த்திகை பெண்களை நேசித்தார் என்ற வகையிலும் உலகில் எங்கும் இல்லாதவாறு ஆறு பெண்களுடன் தாமரை பீடத்தில் முருகருக்கே உரிய மயில், பால்கிண்ணம், சேவல், வேல், சூரியன், சந்திரன் என்ற பொருள்களுடன் மலர்ந்த முகத்துடன் ஞானக்குழந்தையாக 468 சித்தர்களுக்கும் ஞானகுருவாக ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் புதுமையான முறையில் விக்ரஹம் பிரதிஷ்டை செய்து சஷ்டி, கிருத்திகை, விசாகம், போன்ற நாட்களில் சிறப்பு ஹோமங்களை செய்து வருகிறார்.

மேலும் வருகிற, 30, 31.7.2013 ஆடி கிருத்திகையை முன்னிட்டு செவ்வாய் மற்றும் புதன் காலை 10.00 மணியளவில் நடைபெறும் சுப்ரமணிய ஹோமத்திலும், சிறப்பு பிரார்த்தனையிலும் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு கார்த்திகை குமரனையும், கார்த்திகை பெண்களையும், 468 சித்தர்களையும் ஒரு சேர தரிசித்து, உடல் மற்றும் மனரீதியான நோய்களிலிருந்து நிவாரணம் பெறவேணுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203


www.dhanvantripeedam.com
www.danvantripeedam.blogspot.in
E-mail : danvantripeedam@gmail.com

3 comments:

  1. kaarthikai penkalil yaarukkaavathu maru piravi undaa.appadi 1kathai iruppathaaka rajtv il oliparappaakum kaakka kaakka murugan puraana kathai adippadi serial il solkiraarkal.athuvum aval nitharthini endra penn marupiravi pennaaka ppiranthathaak solkiraarkal.karpanai yaaka irunthaalum antha kaarthikai pen patri appadi 1kattukathai ivarkal sollalaama? itharku vilakkam kodungal please

    ReplyDelete
  2. 😂😂🤣 புராணம் நல்ல இருக்கு பட்டமங்கை 6 கார்த்திகை பெண்கள் ..உங்க தமிழ் அழிப்பு புராணம் எல்லாம் சூப்பர்... முருகன் உருவாக்கி கோட்பாடு தான் 6 நிற ஆசிவகர் கோட்பாடு அதாவது கருப்பு நீலம் பச்சை சிவப்பு மஞ்சள் வெள்ளை கார்த்திகை என்றால் என்ன..? கார் என்றால் காடு தீ என்றால் நெருப்பு.. முருகன் காட்டை தீ முட்டி விவசாயம் செய்த நிகழ்வை தான் இப்படி திரிபு கதைய சொல்லுறாங்க...போனா வாரம் தான் திருப்பத்தூர் பட்டமங்கை கோவில் க்கு சென்று வந்தேன்..பல சிற்பங்கள் மாற்ற பட்டுள்ளது கல்வெட்டுக்கள் அழிக்கப்பட்டு ள்ளது போதும் ஐயா உங்கள் புராணம் காட்டுகதைகள்

    ReplyDelete
  3. முருகனை வளர்த்த ஆறு கார்த்திகை பெண்களும் மருத்துவர் சமுதாயத்தை சேர்ந்த செவிலித்தாய்கள்

    ReplyDelete