ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
17.7.2013 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் சுதர்சன ஜெயந்தியை முன்னிட்டு
சுகம்பல தரும் சுதர்சன ஹோமம்

சுதர்சனமும் மகாவிஷ்ணுவின் அம்சமே. நான்கு, ஆறு, எட்டு கரங்கள் மட்டுமின்றி 16, 32 கரங்கள் கொண்ட சக்கரத்தாழ்வாரை பல்வேறு திருக்கோலங்களில் காணலாம். வீறுகொண்ட கோலத்தில் ஷட்கோண சக்கரத்தில் ஜ்வாலைகளுடன் கூடிய அமைப்பில் சக்கரத்தாழ்வாரின் வடிவங்கள் அமைந்திருக்கும். ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பிரதிஷ்டை செய்துள்ள சக்கரத்தாழ்வரை சுகம் பல தரும் சுதர்ஷண ஆழ்வார் என்று அழைக்கப்படுகிறது. சுதர்சனாழ்வார் பின்னால் நரசிம்மர் பிம்பம் கிடையாது. மிகவும் சிரித்த முகத்துடன் அபயம் என்றவுடன் ஓடிவந்து அருள்புரிய கூடியவராக அமைந்துள்ளார் என்பது மிகவும் சிறப்பு. மேலும் இவருக்கு 108 சுதர்சன சாலிகிராமம் சாற்றப்பட்டு உள்ளது மிகவும் சிறப்பு. இது ஒரு விசேஷமான அமைப்பு.
சக்கரத்தாழ்வாரின் வலது கைகளில் சக்கரம். பரசு என்ற மழு. குந்தம் என்ற ஈட்டி, தண்டம், அங்குசம், சதமுகாக்னி கட்கம் என்ற பட்டாக கத்தி வேல் இடது கைகளில் பாசக்கயிறு ஸுராயுதம் கதை மற்றும் ஹலம். முஸலம் என்ற ஆயுதங்கள் இருக்கும் சிற்சில இடங்களில் இவற்றில் மாற்றமும் தென்படும். ஞானம் வழங்குபவரான இவர் ஆரோக்கியம். செல்வம், எதிரிகளிடமிருந்து விடுதலை. பில்லி. சூன்யம், ஏவல் போன்வற்றிலிருந்து நிவாரணம் என்று பல வரங்களை வழங்குபவர். எல்லாவற்றுக்கும் மேலாக திருமாலின் அம்சமான இவர் மோட்ச சாம்ராஜ்ஜியத்தையும் அளிப்பவர்.
இத்தனை சிறப்பு பெற்றுள்ள சக்கரத்தாழ்வாருக்கு வருகிற 17.7.2013 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் உலக நலன் கருதி மஹா சுதர்சன ஹோமமும், திருமஞ்சனமும் நடைபெற உள்ளது.
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
வாலாஜாபேட்டை,வேலூர் மாவட்டம்.
செல் :9443330203
No comments:
Post a Comment