Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, November 12, 2022

Mupperum Yagams 2nd Day, Sankadahara Sathurthi Abishegam at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 101  நாட்கள் நடைபெறும் முப்பெரும் யாகம். சங்கடஹர சதுர்த்தியை  முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், பூஜைகள்

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி,   ஐப்பசி 25ம்தேதி முதல்  வருகிற மாசி மாதம் 7ம்தேதி வரை  தொடர்ந்து 101 நாட்கள் காலை, மாலையில் நடைபெற உள்ள யாகம்   நேற்று 11ம்தேதி தொடங்கியது. 

இதன்படி   நவம்பர் 11ம்தேதி முதல் பிப்ரவரி 19ம்தேதி முடிய   ஸ்ரீ மஹா சுதர்சன ஹோமம், ஸ்ரீ மஹா தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ மஹாலட்சுமி ஹோமம் ஆகிய  3 ஹோமங்களும் தினந்தோறும் என 101 நாட்களும் நடைபெறுகிறது. 

இரண்டாவது நாளாக இன்று 12ம்தேதி  ஸ்ரீசுதர்சன ஹோமம், ஸ்ரீதன்வந்திரி ஹோமம், ஸ்ரீ மஹாலட்சுமி ஹோமம் ஆகிய ஹோமங்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. 

 மேலும் இன்று சங்கடஹர சதுர்த்தியை  முன்னிட்டு ஸ்ரீ வினாயகர் தன்வந்திரிக்கும், ஸ்ரீ தன்வந்திரி வினாயகருக்கும்  சிறப்பு ஹோமமும், பால்,  பன்னீர், திரவிய பொடி,  மஞ்சள், சந்தனம் ஆகியவை கொண்டு சிறப்பு  அபிஷேகமும் , பூஜையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  ஸ்வாமி தரிசனம் செய்தனர். 

 வருகிற ஐப்பசி 30ம்தேதி, நவம்பர் 16ம்தேதி புதன்கிழமை தேய்பிறை அஷ்டமி  மற்றும் கால பைரவர்  ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ அஷ்டகால மகா பைரவருக்கு  1000 கிலோ விபூதி அபிஷேகமும், 64 பைரவர் ஹோமங்கள், மகா கணபதி ஹோமம்  ஆகியவையும் காலை முதல் மாலை வரை  நடைபெற உள்ளது.  மேலும் 16ம்தேதி  அகில உலக புரோகிதர்கள் மற்றும்  புரோகிதர்களின் குடும்ப நலன் கருதி சிறப்பு தன்வந்திரி யாகமும் நடைபெறுகிறது.







இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment