Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, November 11, 2022

101 Days, Daily 3 Homams starts today (11.11.2022) at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  101  நாட்கள் நடைபெறும் முப்பெரும் யாகம்  இன்று தொடங்கியது 

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி,  இன்று  ஐப்பசி 25ம்தேதி முதல்  வருகிற மாசி மாதம் 7ம்தேதி வரை  தொடர்ந்து 101 நாட்கள் காலை, மாலையில் நடைபெற உள்ள யாகம் இன்று  தொடங்கியது. 

இதன்படி இன்று  நவம்பர் 11ம்தேதி முதல் பிப்ரவரி 19ம்தேதி முடிய   ஸ்ரீ மஹா சுதர்சன ஹோமம், ஸ்ரீ மஹா தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ மஹாலட்சுமி ஹோமம் ஆகிய  3 ஹோமங்களும் தினந்தோறும் என 101 நாட்களும் நடைபெறுகிறது. 

இந்த  ஹோமங்களுக்கான தொடக்க  நிகழ்ச்சி இன்று காலை  கோ பூஜை மற்றும் கணபதி பூஜையுடன் தொடங்கி பின்னர்  ஹோமங்களும் சிறப்புபூஜைகளும் நடைபெற்றது.  

 மேலும் இன்று பிரம்மா ஆலய பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு  ஸ்ரீ வாக்தேவி சமேத சதுர்முக பிரம்மாவிற்கு சிறப்பு ஹோமமும், பால்,  பன்னீர், திரவிய பொடி,  மஞ்சள், சந்தனம் ஆகியவை கொண்டு சிறப்பு  அபிஷேகமும் , பூஜையும் நடைபெற்றது. 

 வருகிற ஐப்பசி 30ம்தேதி, நவம்பர் 16ம்தேதி புதன்கிழமை தேய்பிறை அஷ்டமி  மற்றும் கால பைரவர்  ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ அஷ்டகால மகா பைரவருக்கு  1000 கிலோ விபூதி அபிஷேகமும், 64 பைரவர் ஹோமங்கள், மகா கணபதி ஹோமம்  ஆகியவையும் காலை முதல் மாலை வரை  நடைபெற உள்ளது.  மேலும் 16ம்தேதி  அகில உலக புரோகிதர்கள் மற்றும்  புரோகிதர்களின் குடும்ப நலன் கருதி சிறப்பு தன்வந்திரி யாகமும் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.







No comments:

Post a Comment