Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, November 1, 2022

Magala Chandi Yagam and Special Prayer at Sri Danvantri Arokya Peedam

 



வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் குஜராத் மாநில  பால விபத்தில்  காயமடைந்தவர்கள்  குணமடைய வேண்டியும், இறந்தவர்கள் முக்தி அடைய  வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை .

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, ஐப்பசி மாத சப்தமி திதியை முன்னிட்டு இன்று நவம்பர் மாதம் 1ம்தேதி  செவ்வாய்க்கிழமை  காலை 7.30 மணி  முதல் மதியம் 2 மணிவரை,நவக்கிரக தோஷங்கள் அகல,  நிலம், பூமி, வீடு மனை மற்றும் சொத்து தகராறு வழக்குகள்  நீங்கிட, தோஷங்கள்,திருமணத்தடை அகல,  மன அமைதி பெற்று,மன சோர்வு நீங்கி,திருஷ்டி, செய்வினை அகன்றிட,  கணவன் மனைவி ஒற்றுமை பெற, கடன் தொல்லை அகன்றிட, பதவி, படிப்பு, தொழில்,  வியாபாரம் போன்றவற்றில் ஏற்படும் தடைகள் விலகிட வேண்டி  மங்கள சண்டியாகம் நடைபெற்றது. 

மங்கள சண்டி யாகத்தை முன்னிட்டு  காலை கோ பூஜை, கணபதி சங்கல்பம், யாகசாலை பூஜைகள்,  நவதானியங்கள்,  பல்வேறு வகையான பூக்கள்,  பழங்கள், கரும்பு, இனிப்பு வகைகள்,  பூசணிக்காய்  உள்பட பல்வேறு வகையான பொருள்கள்  வைத்து நடைபெற்ற  சண்டி யாகம், பைரவர் பூஜைகள்  நடைபெற்றது. 

பின்னர் சண்டி யாகத்தை  முன்னிட்டு மகிஷாசுர மர்த்தினிக்கு 13 வகையான கலசங்களில்  வைத்து பூஜிக்கப்பட்ட தீர்த்தங்கள் மற்றும்  பால், சந்தனம், மஞ்சள்,  பன்னீர் , திரவிய பொடி  ஆகியவை  கொண்டு  சிறப்பு அபிஷேக, ஆராதனையும், அதை தொடர்ந்து ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினிக்கு சிறப்பு அலங்காரத்துடன்  புஷ்பாஞ்சலியும், தீபசேவையும் நடைபெற்றது. 

சண்டி யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு  பீடாதிபதி  டாக்டர். ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.

சிறப்பு பிரார்த்தனை 

முன்னதாக   சண்டியாகத்தில் , குஜராத் மாநிலம் மோர்பியில்  நடைபெற்ற கேபிள் பால  விபத்தில்  காயமடைந்த  முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் விரைவில் பூரண குணமடைய  வேண்டியும்,  விபத்தில் இறந்தவர்கள் முக்தி அடைய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.இந்த சிறப்பு பிரார்த்தனையில்  பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.









No comments:

Post a Comment