Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, January 8, 2020

365 Days - 365 Homam - 8th Day - Guru Graha Santhi Homam...


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
365 நாள் – 365 ஹோமம்
8வது நாள் – குரு கிரக சாந்தி ஹோமம்.
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதியக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதியும், உலக க்ஷேமத்திற்காகவும் சென்ற 26.04.2012 முதல் 25.05.2013 வரை நடைபெற்ற 365 நாள்365 யாகம், ஏகோபித்த பக்தர்கள் வேண்டு கோளுக்கிணங்க இரண்டாவது முறையாக 01.01.2020 புதன்கிழமை மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து எட்டாவது நாளான இன்று 08.01.2020 புதன்கிழமை குரு கிரக சாந்தி ஹோமம் நடைபெற்றது. இதில் ஞானம் பெறவும், மன அமைதி கிடைக்கவும், வாழ்வில் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கவும், கற்பனை சக்தி அதிகரிக்கவும், வேலைவாய்ப்பு, செல்வம் போன்ற பல நன்மைகள் பெற பிரார்த்தனை நடைபெற்றது. இதில் குரு பகவானுக்குரிய பூக்கள், திரவியங்கள், நிவேதன பொருட்கள், நாவ பழங்கள், வஸ்திரங்கள் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ மேதா தக்ஷிணா மூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் 9வது நாளான நாளை 09.01.2020 வியாழக்கிழமை ருண, ரோக நிவர்த்தி பெறவும், சத்ரு பயம், கெட்ட சக்திகள் விலகவும், உறவினர்களுடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் நீங்கவும், காரிய தடைகள் அகலவும், அனைத்து செயல்களிலும் வெற்றி பெறவும். சொந்த வீடு, வாகனம் மற்றும் மிகுதியான செல்வ சேர்க்கை போன்ற பாக்கியங்களை பெறவும் ஸ்ரீ நரசிம்மர் ஹோமமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது. இவ்வைபவம் வருகிற 31.12.2020 நடைபெற உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.






No comments:

Post a Comment