Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, January 11, 2020

365 Days - 365 Homam - 11th Day Sri Anusuya Devi Homam...


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
365 நாள் – 365 ஹோமம்
11வது நாள்  ஸ்ரீ அனுசுயா தேவி ஹோமம்.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன்  உலக மக்கள் நலன் கருதியும், உலக க்ஷேமத்திற்காகவும் சென்ற  26.04.2012  முதல்  25.05.2013 வரை நடைபெற்ற 365 நாள்    365 யாகம், ஏகோபித்த பக்தர்கள் வேண்டு கோளுக்கிணங்க இரண்டாவது முறையாக 01.01.2020 புதன்கிழமை மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து 11வது நாளான இன்று ஸ்ரீ அனுசுயா தேவி ஹோமம் நடைபெற்றது. இதில் வாழ்க்கையில் பல்வேறு நன்மைகள் பெறவும், கணவன் மணைவி ஒற்றுமை மற்றும் பல நன்மைகள் பெற பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஸ்ரீ அனுசுயா தேவிக்கு உரிய  பூக்கள், திரவியங்கள், நிவேதன பொருட்கள், பழங்கள், வஸ்திரங்கள் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து பீடத்தில் உள்ள ஸ்ரீ அனுசுயா தேவி சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் 12வது நாளான நாளை 12.01.2020 ஞாயிற்றுக்கிழமை நக்ஷத்திர தோஷங்கள் விலகவும், குடும்ப க்ஷேமத்திற்காகவும், 27 நக்ஷத்திரக்காரர்கள் நலனுக்காகவும்,  மேலும் பல்வேறு நன்மைகள் பெறவும் 27க்ஷத்திரங்களின் அதிதேவதா ஹோமமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது. இவ்வைபவம் வருகிற 31.12.2020 வரை நடைபெற உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.






No comments:

Post a Comment