Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, January 12, 2020

365 Days - 365 Homam - 12 th Day - Sri Nakshatra Athi Devata Homam..

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 365 நாள் – 365 ஹோமம் - 12வது நாள். 27 நக்ஷத்திர அதி தேவதா ஹோமம்.
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதியும், உலக க்ஷேமத்திற்காகவும் சென்ற 26.04.2012 முதல் 25.05.2013 வரை நடைபெற்ற 365 நாள் – 365 யாகம், ஏகோபித்த பக்தர்கள் வேண்டு கோளுக்கிணங்க இரண்டாவது முறையாக 01.01.2020 புதன்கிழமை மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து 12வது நாளான இன்று 27 நக்ஷத்திர அதி தேவதா ஹோமம் நடைபெற்றது. இதில் நக்ஷத்திர தோஷங்கள் விலகவும், குடும்ப க்ஷேமத்திற்காகவும், 27 நக்ஷத்திரக்காரர்கள் நலனுக்காகவும், மேலும் பல நன்மைகள் பெறவும் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் 27 நக்ஷத்திர அதி தேவதைகளுக்குரிய பூக்கள், திரவியங்கள், மூலிகை பொருட்கள், பழங்கள், வஸ்திரங்கள் சேர்க்கப்பட்டது. மேலும் 13வது நாளான நாளை 13.01.2020 திங்கள்கிழமை வம்ச விருத்தி வேண்டியும், கொடிய நோய்களிலிருந்து நிவாரணம் பெறவும், சத்ரு உபாதைகள் அகலவும், வழக்கு மற்றும் சட்ட சிக்கல்களிலிருந்து விடுபடவும், கடன் தொல்லைகள் அகலவும் மற்றும் பல நன்மைகள் பெற ஸ்ரீ சுப்ரமண்ய ஹோமம் நடைபெற உள்ளது. இவ்வைபவம் வருகிற 31.12.2020 வரை நடைபெற உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.



No comments:

Post a Comment