Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, November 26, 2014

தன்வந்திரி பீடத்தில் நவம்பர் 28 முதல் தைலாபிஷேகம் ஆரம்பம்28.11.2014

 வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டை அனந்தலை மதுரா கீழ்பதுப்பேட்டை யில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உலக மக்களின் உடல் பிணி தீர 8 அடி உயரமுள்ள ஸ்ரீ தன்வந்திரி முலவருக்கு 11 ம் ஆண்டு தைலாபிஷேக திருவிழா நடைபெற உள்ளது, இந்த வைபவம் நவம்பர் 28 வெள்ளிக் கிழமை முதல் டிசம்பர் 14 ம் தேதி ஞாயிற்று கிழமை வரை தினமும் காலை 9,00 மணி முதல் மாலை 6,00 மணி வரை நடைபெற உள்ளது,

தன்வந்திரி பகவான் யார்

தன்வந்திரி பகவான் நோய் தீர்க்கும் கடவுள் இவர் மகா விஷ்ணுவின் அவதாரம் கைகளில் அமிர்த கலசம் ஏந்தியவர் மருத்துவ கடவுள் உலக மக்களின் உடல் பிணி உள்ளத்து பிணி நீக்கி ஆயுஙள ஆரோக்கியத்தை தருபவர், இவரை வழிபடுவதால் அனைத்து விதமான நோய்களும் நீங்கும் எ என்பது பக்தர்களின் நம்பிக்கை ,

தைலாபிஷேகம் செய்வதால் ஏற்படும் பலன்கள்

இங்கு தைலம் என்பது நல்ல எண்ணையை கொண்டு முலவர் தன்வந்திரி பகவானுக்கு அபிஷேகம் நடை பெற உள்ளது, நல்ல எண்ணை என்பது எள் விதையில்ருந்து எடுக்கப்படுவதாகும், எள் என்பது சனீஸ்வர பகவானுக்கு வேண்டிய விஷேச திரவியமாகும், எள்ளை கொண்டு தான் சனி கிரக தோஷம் உள்ளவர்களுக்கு பரிகார பிரித்தியாக எள்ளு தானமும் எள்ளு ஹோமமும் எள்ளு எண்ணையை கொண்டு தெய்வங்களுக்கு எண்ணை காப்பு சாற்றுவது போன்ற வைபவங்களுக்கு சனி பிரித்தியாக கருதுகிறோம், இத்தகைய எண்ணையினால் நோய் தீர்க்கும் கடவுளான தன்வந்திரி பகவானுக்கு தைலாபிஷேகமாக செய்வதால் நோய் உற்றவர்கள் விரைவில் குணமடையவும் ஆயுள் தோஷம் நீங்கவும் மனத் தடைகள் மன நோய்கள் நீங்கவும் நவகிரகங்களால் ஏற்படும் நோய்கள் மற்றும் கஷ்டங்கள் குறையவும் ஏழ அறை சனி அஷ்டம சனி அர்ராஷ்டம சனி போன்ற சனி கிரகத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கவும் வாய் புண் வயிற்று புண் குடல் சம்மந்தமான நோய்கள் கண் சம்மந்தமான நோய்கள் ஆரோக்கிய சம்மந்தமான குறைகள் நீங்குவதற்க்கு வழி வகை செய்யும், இந்த விஷேசமான வைபவத்தில் அனைத்து பக்தர்களும் பங்கேற்று பயன் பெற பிராத்திக்கின்றோம்,

No comments:

Post a Comment