Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, August 7, 2014

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 08.08.2014 வெள்ளிக்கிழமை அன்று வரலட்சுமி நோன்பு நாளை முன்னிட்டு கௌரி ஹோமம்

                  வரலட்சுமி விரதமும் - பெண்களும்

மகாலட்சுமி, பாற்கடலில் அவதரித்தவள். மகாவிஷ்ணுவை மணந்தாள். விஷ்ணு பூமியில் அவதாரம் செய்த நாட்களில் சீதாவாகவும், பத்மாவதியாகவும், துளசியாகவும், ஆண்டாளாகவும். இன்னும் பல வடிவங்கள் எடுத்து வந்தவள். பூலோகத்திலும், அவள் அவரைக் கைப்பிடித்தாள். செல்வத்தின் அம்சமாக இருந்து, நம் பாவ, புண்ணியத்திற்கேற்பவும், விதிப்பலனுக்கேற்பவும் செல்வத்தை வழங்கும் அவளுக்கு நன்றி தெரிவிக்கும் விரதமே வரலட்சுமி விரதம் ஆகும்.நித்தியசுமங்கலியான மகாலட்சுமி பொறுமையே வடிவானவள். கணவரின் இதயத்தில் குடியிருக்கும் இவள், பெண்களை துன்பங்களில் இருந்து காப்பவளாக திகழ்கிறாள். மஞ்சள் நிற பட்டு அணிந்திருக்கும் இவள் கருணை, அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியாவாள். அதர்வண வேதத்தில் லட்சுமி, அனைவருக்கும் நன்மை தருபவள் என்று கூறப்பட்டுள்ளது. பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பதால், அஷ்ட லட்சுமிகளும் மகிழ்வதாக ஐதீகம். இதனால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். திருமணதோஷம் உள்ள கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். செல்வம், தான்யம், தைரியம், வெற்றி, வீரம், புத்திர பாக்கியம், கல்வி போன்ற செல்வங்கள் அனைத்தும் கிடைக்கும்.வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள், லட்சுமியை பூஜிக்கும் போது அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிப்பது நல்லது. இதனால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பர்.

வரலட்சுமி விரதம் இருப்பவர்கள் வீட்டின் தென்கிழக்கு மூலையில் சிறு மண்டபம் அமைத்துக் கொள்ள வேண்டும். அவ்விடத்தில் ஒரு பலகையை வைத்து அதில் சந்தனத்தில் செய்த லட்சுமியின் வடிவத்தை வைக்கவேண்டும். வெள்ளி சிலைகளும் வைக்கலாம். சிலைக்கு மஞ்சள் ஆடை அணிவித்து, தாழம்பூவால் அலங்காரம் செய்து, எதிரில் வாழை இலை போட்டு அதில் ஒரு படி பச்சரிசியை பரப்ப வேண்டும். புனித நீர் நிரம்பிய கும்பத்தை அரிசியின் நடுவில் வைக்க வேண்டும். தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பழங்கள், தங்கநகை ஆகியவற்றையும் இலையில் படைக்க வேண்டும். கொழுக்கட்டை நைவேத்யம் செய்ய வேண்டும். பின்பு பூஜை செய்ய வேண்டும். அப்போது, அஷ்டலட்சுமிகளுக்கு விருப்பமான அருகம்புல்லை சிலை மீது தூவி பூஜிப்பது நல்லது. ஏழை சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் கயிறை வலது கையில் கட்டி, தேங்காய், குங்குமம், புதிய ஆடைகள் கொடுக்க வேண்டும். பூஜைக்கு பிறகு, கும்பத்திலுள்ள புனிதநீரை செடி அல்லது மரங்களுக்கு ஊற்றிவிட்டு, கும்பத்தை ஒரு பெட்டியில் வைத்து பத்திரப் படுத்த வேண்டும். அதை சுத்தமான இடத்தில் வைக்க வேண்டும். வேறு பூஜைகளுக்கு இதைப் பயன்படுத்தும் போது மட்டுமே எடுக்க வேண்டும். சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தக்கூடாது. அது நெளிந்து விட்டாலோ, பிற பழுது ஏற்பட்டாலோ யாருக்காவது தானமாகக் கொடுத்து விட வேண்டும். சந்தனத்தில் செய்த லட்சுமியின் உருவத்தை மறுநாள் நீர்நிலைகளில் கரைத்து விட வேண்டும். தேவலோகத்தில் சித்திரநேமி என்ற பெண் வசித்து வந்தாள். இவள், தேவர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நீதிபதியாக இருந்தவள். ஒருசமயம் அவள் தீர்ப்பு சொல்லும்போது, பாரபட்சமாக நடந்து கொண்டாள். நீதி வழங்குபவர்கள் எந்த சூழ்நிலையி<லும் நடுநிலை தவறக்கூடாது. ஆனால், சித்திரநேமி தன் பணியில் இருந்து தவறி விட்டாள். எனவே, பார்வதிதேவி அவளுக்கு குஷ்டநோய் ஏற்படும்படி சபித்து விட்டாள். சித்திரநேமி சாப விமோசனம் கேட்டாள்.

வரலட்சுமி விரதம் இருந்து தன்னை வழிபட்டால் விமோசனம் கிடைக்கும் என்றாள். அதன்படி சித்தரநேமி, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கி, நோய் நீங்கப்பெற்றாள். பணியிலோ, குடும்ப விவகாரத்திலோ நடுநிலை தவறி, அதனால் மன உளைச்சலில் இருப்பவர்களுக்கு வரலட்சுமி விரதம் அனுஷ்டிப்பது மனபாரத்தை குறைக்கும் மருந்தாக இருக்கும். வரலட்சுமி விரதத்தன்று, புண்ணய நதிகளில் நீராடுவது, ஒரு வருடம் தொடர்ந்து வரலட்சுமி விரதம் இருப்பதற்கு ஒப்பான பலன்களைத் தரும். கங்கை, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய நதிகளில் அன்று நீராடினால் செல்வச்செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை. புகுந்த வீட்டு உறவினர்களை மதித்து நடக்கும் பெண்கள், வரலட்சுமி விரதம் இருந்த பலன்களை பெறுவதாக ஐதீகம். மகத நாட்டில் வசித்த சாருமதி என்ற பெண்ணை அவளது பெற்றோர் மண முடித்துக் கொடுத்தனர். புகுந்த வீட்டில் கணவன், மாமனார், மாமியார், உறவினர்கள் என அனைவரையும், அவள் சொந்தமாக பார்க்காமல், கடவுளின் வடிவமாகவே பாவித்து, பணிவிடை செய்தாள். இதனால், அவள் வரலட்சுமி விரதம் இருந்த பலனை பெற்றாள். தன் கணவனுடன் நீண்ட காலம் தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்தாள்.

வரலக்ஷ்மி அம்மன் பூஜையின் விபரம்

தாமரச் சொம்பிலோ, அல்லது வெள்ளிச் சொம்பிலோ சுண்ணாம்பு பூசி, ஸ்ரீ தேவியின் முகத்தை செங்காவியினால் எழுதி கலசத்திற்குள் சோபனத்திரவ்யம் (அரிசி, வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், எலுமிச்சை, ஸ்வர்னம்) போட்டு:

ஓலை, கருகமணி போட்டு; கண்ணாடி, சீப்பு, வைத்து கலசத்தில் மாவிலை தேங்காய் வைத்து, ஆபரணம் பூமாலை இவைகளால் அலங்கரிக்க வேண்டும். ரேழியில் மாவு கோலம் போட்டு அங்கே தீபம் ஏற்றிவைத்து பலகை மீது கலசத்தை வைத்து தீபாராதனை செய்து மங்களம் பாடி ஹாரத்தி எடுத்து இருசுமங்கலிகள் கைபிடித்து லக்ஷ்மி! ராவேமாயிண்டிகு என்று பாடி உள்ளே கொண்டு போய் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தின் நடுவில் வைத்து நுனி இலையில் அரிசியைப் பரப்பி அதன் நடுவில் கலசத்தை வைத்து பூஜை ஆரம்பிக்க வேண்டும்.

சுவற்றில் சுண்ணாம்பு அடித்து மண்டபம் போல் எழுதி நடுவில் தேவி உருவத்தையும் எழுத வேண்டும். மாலை வேளையே லக்ஷ்மி பூஜைக்கேற்ற காலமாகும். காலத்திற்கேற்றபடி சிலர் காலையிலேயே அனுஷ்டிக்கிறார்கள். ஸ்ரீ குருவை நமஸ்கரித்து ஆசி பெற்று சந்தோஷமான மனதுடன் அம்மனைக் கொண்டாடி பூசித்து நிவேதனம் செய்து மங்களங்கள் பாடினால் லக்ஷ்மி நாராயணனுமாக நம் இல்லத்தில் வாஸம் செய்து சர்வமங்களங்களையும் அளிக்க வல்ல ஸ்ரீ ருக்மணி காந்தனுடைய அருள் ஏற்படும் என்பது திண்ணம்.

இத்தனை சிறப்பு வாய்ந்த வரலட்சுமி விரதத்தை எத்தனை பேர் கடைபிடிக்கிறார்கள் என்று பார்த்தால் விரல்விட்டு எண்ணும் அளவில்தான் உள்ளார்கள் எனலாம். காரணம் கூட்டுக்குடும்பங்கள் சிதறுண்டு போனது, இடப்பற்றாக்குறை, பொருளாதார சூழ்நிலை இப்படி பலவகையான காரணகளாகும்.

இவை அனைத்தையும் மனதில் கொண்டு கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 08.08.2014 வெள்ளிக்கிழமை அன்று வரலட்சுமி நோன்பை முன்னிட்டு சிறப்பு கௌரி ஹோமமும், கூட்டுபிரார்த்தனையும் நடத்த உள்ளார்கள். இந்த வைபவத்தில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேணுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் இதில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு திருமாங்கல்ய சரடு மற்றும் செளாபாக்ய பொருட்கள் வழங்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறோம்.

தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203

No comments:

Post a Comment