Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, December 22, 2013

த்ருஷ்டி துர்கா ஹோமத்துடன் ராஜ ப்ரத்யங்கிரா தேவி ஹோமம் சிறப்பாக நடைபெற்றது...

தொடர்ந்து 4வது நாளாக 5000 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு த்ருஷ்டி துர்கா ஹோமத்துடன் ராஜ ப்ரத்யங்கிரா தேவி ஹோமம் நடைபெற்றது.


டிசம்பர் 22.12.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் 4வது நாளாக த்ருஷ்டி துர்கா ஹோமத்துடன்  ராஜ ப்ரத்யங்கிரா தேவி ஹோமம் காலையும், மாலையும் நடைபெற்றது. இந்த ஹோமத்தில் புதுவை மாநில சபாநாயகர் V.சபாபதி அவர்கள், வேலுர் மாவட்டம், வாலாஜாபேட்டை சேர்மன் W.S.வேதகிரி, துணைச் சேர்மன் G.K.மூர்த்தி, நகரமன்ற உறுப்பினர்கள் முரளி, D.R.ரவி, செய்யது உஸ்மான், ஆற்காடு ஜோதிடர் மகாலிங்கம் மற்றும் கட்டிடக்கலை நிபுணர் S.M.சுகுமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்த ஹோமத்தில் ஆயிரம் கிலோ மிளகாய், பூசணிக்காய், மஞ்சள், குங்குமம், நவதான்யங்கள், வேப்பெண்ணெய், பட்டு வஸ்த்திரங்கள் மற்றும் மூலிகை திரவியங்கள் சேர்க்கப்பட்டன.

இதில் இலங்கை, சிங்கப்பூர், தமிழ்நாடு, புதுவை மற்றும் பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்து கலந்து கொண்டு கூட்டு ப்ரார்த்தனை செய்தனர். பின்னர் நடைபெற்ற அன்னதானத்திலும் கலந்து கொண்டனர். பிரசாதமும் வழங்கப்பட்டது.

மேலும் 23.12.2013 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் நிகும்பலா ஹோமத்துடன் மங்கள ப்ரத்யங்கிரா தேவி ஹோமம் நடைபெற உள்ளது.
இந்த ஹோமத்தில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என்று ஸ்வாமிகள் தெரிவித்தார்.

No comments:

Post a Comment