Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, December 11, 2022

Sri Danvantri Sanjeevini Theerthakulam Opening at sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ தன்வந்திரி சஞ்சீவினி தீர்த்தக்குளம் திறப்பு விழா ஸ்ரீ புரம் சக்தி அம்மா, ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் பங்கேற்பு 

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, தன்வந்திரி  ஆரோக்ய பீடத்தின்  18 வது ஆண்டு வருஷாபிஷேக விழா,  பீடாதிபதி ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் 62 வது ஜெயந்தி விழா, தீர்த்தக்குளம்  திறப்பு விழா, ஸ்தல வரலாறு நூல் வெளியீட்டு விழா  மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை அடங்கிய ஐம்பெரும் விழா    கடந்த 9ம்தேதி வெள்ளிக்கிழமை  தொடங்கி   நேற்று  11ம் தேதி  முடிய நடைபெற்றது.

விழாவில்   மூன்றாம் நாளான இன்று 11ம்தேதி ஞாயிற்றுக்கிழமை  மஹா கணபதி பூஜை, அஷ்ட திக் பாலகர் பூஜை, வருண பூஜை , கங்கா பூஜை ஆகியவை நடைபெற்றது. பின்னர் 62 தம்பதி பூஜையும் , நாதஸ்வர கலைஞர்களின் இசை  விழாவும் நடைபெற்று  வஸ்திர தானம் வழங்கப்பட்டது. 

 விழாவில் சிறப்பு அழைப்பாளராக  வேலூர், ஸ்ரீ புரம்  தங்க கோவில்  சக்தி அம்மா கலந்து கொண்டு ,21 அடி  உயர விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடர்,  மூலவர் தன்வந்திரி பெருமாள் ஆகியோருக்கும்,  கருட கங்கா ஸ்ரீ தன்வந்திரி 

சஞ்சீவினி தீர்த்த குளத்திலும், கருடருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள்   நடத்தி  தீர்த்தக்குளத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளை வாழ்த்தியும், பக்தர்களுக்கு அருளாசி வழங்கியும் பேசினார்.

பூஜைகள் மற்றும் தீர்த்தக்குள திறப்பு விழாவில்   ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  மூலவர் தன்வந்திரி மற்றும் பரிவார தெய்வங்களையும் தரிசனம் செய்து  பிரசாதமும்,  பீடாதிபதி  ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளிடம் ஆசியும் பெற்று சென்றனர். 

விழாவில்  ரத்தினகிரி  பாலமுருகனடிமை ஸ்வாமிகள், பெங்களூர் மதுசூதனானந்த ஸ்வாமிகள், ஆற்காடு தொழிலதிபர் ஜெ.லட்சுமணன் உள்பட  ஆன்மீக பெரியோர்கள்,  பல்வேறு அரசியல் கட்சியினர், சுற்றுப்புற கிராம நிர்வாகிகள், வியாபாரிகள், தொழிலதிபர்கள் உள்பட  பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  

விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.  









Saturday, December 10, 2022

Sri muralidhara Swamigal’s 62nd Jayanthi Festival Invitation-18th year mahotsavam 2022.- 2nd day

 வாலாஜாபேட்டைதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்ஐம்பெரும் விழா

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, தன்வந்திரி  ஆரோக்ய பீடத்தின்  18 வது ஆண்டு வருஷாபிஷேக விழா,  பீடாதிபதி ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் 62 வது ஜெயந்தி விழா, தீர்த்தக்குளம்  திறப்பு விழா, ஸ்தல வரலாறு நூல் வெளியீட்டு விழா  மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை அடங்கிய ஐம்பெரும் விழா   நேற்று 9ம்தேதி வெள்ளிக்கிழமை  தொடங்கி  வருகிற 11ம் தேதி  முடிய நடைபெறுகிறது.

விழாவில்   இரண்டாம் நாளான இன்று 10ம்தேதி சனிக்கிழமை  மஹா கணபதி, ஸ்ரீ தன்வந்திரி, ஸ்ரீசுதர்சன,ஸ்ரீ மஹாலஷ்மி ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர் மூலவர் தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும், 81 கலச அபிஷேகமும், சிறப்பு அலங்காரத்தில்  பூஜைகளும் நடைபெற்றது.

விழாவில்  மாணவ, மாணவிகள் 62 பேருக்கு  எழுது பொருள்கள் , 62 பேருக்கு 5 கிலோ அரிசி மற்றும் போர்வைகள்  வழங்கப்பட்டது.

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக  காஞ்சிபுரம் லலிதாம்பிகை பீடம் ஸ்வாமிகள், திரைப்பட நடிகர் பூவிலங்கு மோகன், தொழிலதிபர்கள் திருச்சி  கணேசன்,  ருக்மணி, சென்னை ராமாபுரம் ஷீரடி சாய்பாபா ஆலய நிர்வாகி தயாளன், சென்னை மகாலட்சுமி எண்டர் பிரைசஸ் தொழிலதிபர் குணசேகரன்,  தொழிலதிபர்.ஆற்காடு கு.சரவணன், பெல். பிரபு, ஊட்டி ராஜசேகர் ஆகியோர் உள்பட  முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள்,  பல்வேறு அரசியல் கட்சியினர், சுற்றுப்புற கிராம நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 மாலையில் மேட்டூர் பிரதர்ஸ் ன்  இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஹோமங்கள் மற்றும் பூஜைகளில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  மூலவர் தன்வந்திரி மற்றும் பரிவார தெய்வங்களையும் தரிசனம் செய்து  பிரசாதமும்,  பீடாதிபதி  ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளிடம் ஆசியும் பெற்று சென்றனர்.
 
நாளை 11ம்தேதி  தன்வந்திரி தீர்த்தக்குளம் திறப்பு விழா, 62 தம்பதி பூஜை,62 நாதஸ்வர கலைஞர்களின் இசை விழா,முதலுதவி பொருள்கள் வழங்கும் விழா , மரக்கன்றுகள் நடும் விழா , ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு கலசாபிஷேகம் , பூஜைகள் , அலங்காரம் ஆகியவை நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.  








Friday, December 9, 2022

Sri muralidhara Swamigal’s 62nd Jayanthi Festival Invitation-18th year mahotsavam 2022.

 வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஐம்பெரும் விழா 

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, தன்வந்திரி  ஆரோக்ய பீடத்தின்  18 வது ஆண்டு வருஷாபிஷேக விழா,  பீடாதிபதி ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் 62 வது ஜெயந்தி விழா, தீர்த்தக்குளம்  திறப்பு விழா, ஸ்தல வரலாறு நூல் வெளியீட்டு விழா  மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை அடங்கிய ஐம்பெரும் விழா  இன்று 9ம்தேதி வெள்ளிக்கிழமை  தொடங்கி  வருகிற 11ம் தேதி  முடிய நடைபெறுகிறது.

விழாவில்  முதல்நாளான இன்று 9ம்தேதி  காலை மங்கள இசையுடன்  கோ பூஜை, விக்னேஷ்வர பூஜையுடன்  தொடங்கி, மகா கணபதி,நட்சத்திர, நவக்கிரக , ஸ்ரீ தன்வந்திரி,  ஏகாதச ருத்ர ஹோமம் உள்பட 62 வகை விசேஷ  ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர்  மஹா தீபாராதனையுடன் ஸ்வாமிகளுக்கு கலசாபிஷேகம் நடைபெற்றது. 

பின்னர் 62 சுமங்கலிகள் ,62  கன்னி பெண்கள் பங்கேற்ற  சுமங்கலி,  கன்யா பூஜைகள் நடைபெற்றது. 

 விழாவில் ஸ்தல வரலாறு நூல் வெளியிடப்பட்டு , சாதுக்களுக்கு வஸ்திரம், 

5 கிலோ அரிசி  உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

 பின்னர்   மூலவர் ஸ்ரீ தன்வந்திரிக்கு சிறப்பு பூஜையும், ஸ்ரீ ஆரோக்யலஷ்மி தாயாருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. மாலையில்  வாலாஜா  ஸ்ரீ நடராஜ பெருமான் நாட்டிய பள்ளி  எம்.ஷன்மதி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. 

 விழாவில்  சிறப்பு அழைப்பாளர்களாக தவத்திரு. கூனம்பட்டி ஆதினம்,  கலவை சச்சிதானந்த சுவாமிகள்,  நங்க நல்லூர் காமாட்சி  ஸ்வாமிகள், பெலாகுப்பம்  ஸ்ரீலஸ்ரீ ரகுராம அடிகளார் , இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், சிப்காட்  நவசபரி ஐயப்பன் கோவில் ஜெயச்சந்திரன் ஸ்வாமிகள், வாலாஜா  தாசில்தார் நடராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் காண்டீபன்,  வக்கீல் ராஜசேகரன்  உள்பட  முக்கிய பிரமுகர்கள்,  ஆன்மீக சான்றோர்கள்,தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் , வியாபார பெருமக்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், சுற்றுப்புற கிராம நிர்வாகிகள்  உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

நாளை 10ம்தேதி 62 வடுக பூஜை,62 மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருள்கள் வழங்குதல்  உள்பட ஸ்ரீ சுதர்சன ஆ-ழ்வார்க்கு சிறப்பு ஹோமம் அபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது.

நாளை மறுநாள் 11ம்தேதி  தன்வந்திரி தீர்த்தக்குளம் திறப்பு விழா, 62 தம்பதி பூஜை,62 நாதஸ்வர கலைஞர்களின் இசை விழா,முதலுதவி பொருள்கள் வழங்கும் விழா , மரக்கன்றுகள் நடும் விழா , ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு கலசாபிஷேகம் , பூஜைகள் , அலங்காரம் ஆகியவை நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.  









Wednesday, December 7, 2022

Karthigai Pournami Homams, Raku Kethu Annabishegam at sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கார்த்திகை மாத  பௌர்ணமியை முன்னிட்டு ஹோமங்கள், ராகு , கேது அன்னாபிஷேகம்

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி,  இன்று டிசம்பர் 7ம்தேதி புதன்கிழமை  கார்த்திகை மாத  பௌர்ணமியை  முன்னிட்டு  ஆண்கள் திருமணத்தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமம், பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வர கலா பார்வதி ஹோமம்  ஆகிய ஹோமங்கள் நடைபெற்றது. 

பௌர்ணமியை  முன்னிட்டு வேறு எங்கும் இல்லாத வகையில் , சிறப்பு பூஜைகளுடன்  ராகு கேதுவிற்கு அன்னாபிஷேகம் நடைபெற்று ,பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. 

 மேலும் தத்தாத்ரேயர் , அன்னபூரணி ஜெயந்தி தினத்தை  முன்னிட்டு  சிறப்பு ஹோமங்களுடன், அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.

 கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு  ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கும், 468 சிவலிங்க ரூப சித்தர்களுக்கும்  சிறப்பு அபிஷேகம்,   பூஜைகள் நடைபெற்றது.

இந்த  ஹோமங்கள், அபிஷேகம், பூஜைகளில் பக்தர்கள் கலந்து கொண்டு  ஸ்வாமி தரிசனம் செய்து பிரசாதங்களும்,  பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகளிடம் ஆசிகளும் பெற்று சென்றனர். 

 முன்னதாக தன்வந்திரி  பீடத்திற்கு வருகை தந்த   கரூர்,  ஸ்ரீ நந்தீஸ்வரர் ஞானபீடம்  சுவாமி சித்த குருஜி,  தன்வந்திரி பெருமாளை தரிசனம் செய்து ஸ்வாமிகளிடம் ஆசி  பெற்று சென்றார். 








இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.  


Monday, December 5, 2022

Karthigai Somavara Pirathosam Homam, Abishegam, Pooja at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டைதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  கார்த்திகை மாத  சோமாவார  பிரதோஷம் சிறப்பு ஹோமம், அபிஷேகம், பூஜை

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி,  இன்று டிசம்பர் 5ம்தேதி திங்கள்கிழமை  கார்த்திகை மாத சோமாவார  பிரதோஷத்தை  முன்னிட்டு சிறப்பு  ஹோமங்கள், அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.

பிரதோஷத்தை முன்னிட்டு  தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத  மரகதீஸ்வரருக்கு ருத்ர  பாசுபத அஸ்திர ஹோமமும், சிறப்பு அபிஷேக, பூஜைகளும்,   சிவலிங்க ரூபத்தில் உள்ள 468 சித்தர்களுக்கும், சித்தர்களின் ஞானகுருவாக விளங்கும் ஸ்ரீ கார்த்திகைகுமரனுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.

இந்த  பிரதோஷ ஹோமங்கள், அபிஷேகம், பூஜைகளில் பக்தர்கள் கலந்து கொண்டு  ஸ்வாமி தரிசனம் செய்து, பிரசாதங்களும்,  பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகளிடம் ஆசிகளும் பெற்று சென்றனர்.

 முன்னதாக தன்வந்திரி  பீடத்திற்கு வருகை தந்த  விழுப்புரம் மாவட்டம், மேல் சித்தாமூர்,ஜினகாஞ்சி அறச்சாலை  தவத்திரு, லட்சுமி சேன பட்டாரக  மகா ஸ்வாமிகள், தைலாபிஷேகத்தில்  பங்கேற்று  தன்வந்திரி பெருமாளை தரிசனம் செய்தார்.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.  

----








Saturday, December 3, 2022

Bagavath Geethai Book issue to Devotees at Sri Danvantri Arokya peedam

 வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கார்த்திகை மாத ஏகாதசி  முன்னிட்டு சிறப்பு பூஜை, தைலாபிஷேகம். பகவத் கீதை புத்தகங்கள்  இலவசமாக வழங்கப்பட்டது.

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி,  இன்று டிசம்பர் 3ம்தேதி சனிக்கிழமை  கார்த்திகை மாத ஏகாதசி முன்னிட்டு மூலவர் தன்வந்திரி  பெருமாளுக்கு  சிறப்பு பூஜைகளும்,  சிறப்பு தைலாபிஷேகமும் நடைபெற்றது. 

ஆயுள், ஆரோக்யம், சகல ரோக நிவாரணம் வேண்டி  அபிஷேகம் செய்யப்படும்  நல்லெண்ணெய் பிரசாதமாக வழங்கப்படும் இந்த தைலாபிஷேகத்திற்கு  ஏராளமான  பக்தர்கள் நல்லெண்ணெய் வழங்கி தைலாபிஷேகத்தில்  மூலவர் தன்வந்திரி பெருமாளை தரிசனம் செய்தனர்.

 கார்த்திகை மாத ஏகாதசி  நாளில் தான்  குருசேத்திரத்தில்  கிருஷ்ணன், அர்ஜுனனுக்கு  கீதையை உரைத்தார். எனவே கீதா ஜெயந்தியும் இந்த நாளில் கொண்டாடப்படுகிறது. 

கீதா ஜெயந்தியை  முன்னிட்டு பக்தர்களுக்கு  பகவத் கீதை புத்தகம்  இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  சென்னையை சேர்ந்த  டாக்டர்.ரங்கராஜன் கலந்து கொண்டு,  பீடாதிபதி. டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் முன்னிலையில் பக்தர்களுக்கு பகவத் கீதை புத்தகங்களை வழங்கினார்.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.  









Friday, December 2, 2022

Sri Moogambigai Sannathi Boomi Poojai,Homam at Sri Danvantri Arokya peedam

 வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்ரீ தாய் முகாம்பிகை ஆலய  பூமி பூஜை விழா, இலவச பகவத் கீதை புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி 

 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, சைவம், வைணவம், ஸ்ரீ சாக்தம், சௌரம், கௌமாரம், காணாபத்யம்  என ஷண்மதத்திற்குரிய தெய்வங்களுக்கும் என  மொத்தம் 89 திருச்சன்னதிகள் அமையபெற்று,  தினந்தோறும்  பல்வேறு வகையான யாகங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் புதியதாக ஸ்ரீ  தாய் மூகாம்பிகைக்கும்  ஆலயமும்  அமைய உள்ளது. 

ஸ்ரீ தாய் மூகாம்பிகை  ஆலயம் அமைப்பதற்கான பூமி பூஜை  நிகழ்ச்சி   இன்று டிசம்பர்  2ம்தேதி வெள்ளிக்கிழமை  நடைபெற்றது.

 பூமி பூஜையை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு  புனித கலசங்களில் நீர் கொண்டு வரப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. 

நாளை டிசம்பர் 3ம்தேதி  சனிக்கிழமை கார்த்திகை மாத ஏகாதசி , கார்த்திகை மாத ஏகாதசி  நாளில் தான்  குருசேத்திரத்தில்  கிருஷ்ணன், அர்ஜுனனுக்கு  கீதையை உரைத்தார். எனவே கீதா ஜெயந்தியும் இந்த நாளில் கொண்டாடப்படுகிறது. 

நாளை  ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு. பக்தர்களுக்கு பகவத் கீதை புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.