வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ராஜ கோபுர பூமி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்பு.
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் 89 பரிவார மூர்த்திகளுடன் அருள்பாலிக்கும் ஸ்ரீ ஆரோக்லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு 31 அடி உயரத்தில்5நிலைகள் கொண்ட ராஜகோபுரம் அமைக்க பூமி பூஜை மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இதற்கான பூர்வாங்க பூஜையாக சப்தகன்னிகள், நவகன்னிகைகள் மற்றும் ஸ்ரீ பால் முனீஸ்வரருக்கு பொங்கலிடுதல் வைபவம் சுமங்கலி பூஜை தன்வந்திரி மூலவருக்கு 108 கலச திருமஞ்சனம் நடைபெற்று பலவகையான வண்ண மலர்கள் கொண்டு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. முன்பாக காலை 6.00 மணிக்கு மகா கணபதி பூஜை, வாஸ்து பூஜை, அஷ்டதிக் பாலகர் பூஜை, கூஷ்மாண்ட பூஜை, கோ பூஜையுடன் தொடங்கி காலை 9.00 மணிக்கு அகில இந்திய விஷ்ணு சகஸ்ர நாம பாராயண கலாச்சார கூட்டமைப்பைச் சேர்ந்த ஆண் பெண் உறுப்பினர்கள் சுற்றுவட்ட நகர கிராம மக்கள், தன்வந்திரி குடும்பத்தினர்கள், மற்றும் முக்கியஸ்தர்கள் பங்கேற்று 1008 செங்கல் பூஜையுடன் பூமி பூஜை நடைபெற்றது. இவ்வைபவத்தில் வேலூர் நாராயணி மருத்துவமனை இயக்குநர் டாக்டர். பாலாஜி அவர்கள், இரத்தினகிரி தவத்திரு பாலமுருகனடிமை ஸ்வாமிகள், சித்தஞ்சி தவத்திரு மோகனானந்த ஸ்வாமிகள் 108 சக்தி பீடம் காமாட்சி ஸ்வாமிகள், லலிதாம்பிகை பீடம் தவத்திரு பாலானந்த ஸ்வாமிகள், நெமிலி பாலாபீடம் தவத்திரு கவிஞர் எழில்மணி ஸ்வாமிகள், வனதுர்கா பீடம் தவத்திரு பிரசாத் ஸ்வாமிகள், பூமாத்தம்மன் பீடம் தவத்திரு வடபாதி சித்தர் ஸ்வாமிகள், சரபேஸ்வரர் பீடம் தவத்திரு ஞானபிரகாச ஸ்வாமிகள், திருத்தணி பாலாபீடம் தவத்திரு யோகானந்த ஸ்வாமிகள், மாநில சுற்றுச்சூழல் அணித்தலைவர் வினோத் காந்தி மற்றும் தொழிலதிபர்கள் ஜெ.லக்ஷ்மணன், திரு. சரவணன், திரு. மகேந்திர வர்மன், திருப்பாற்கடல் சுந்தரம், டாக்டர். ரங்கராஜன் சென்னை, முன்னாள் காவல்துறை ஆணையர் திரு. அறிவுச்செல்வம் ஐ.பி.எஸ், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். திரு. ஸ்ரீதரன். மற்றும் அனந்தலை பஞ்சாயத்துத்தலைவர் தேவகிமகாதேவன், துணைத்தலைவர் மீனா பெருமாள், அரசியல் பிரமுகர்கள் டபிள்யூ. ஜி. முரளி,திரு.சுரேஷ், வாலாஜாபேட்டைநகரகிராமபொதுமக்கள் மற்றும் பல்வேறு மாநில மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதனைத் தொடர்ந்து மூலவர்ஸ்ரீதன்வந்திரிபெருமாளுக் கு 108கலச திருமஞ்சன வைபவத்துடன் மாபெரும்புஷ்பயாகம்விஷ்ணுசகஸ் ரநாம பாராயணத்துடன் மாலை வரை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானமும் விஷேச அருட் பிரசாதமும்டாக்டர்ஸ்ரீமுரளிதரஸ் வாமிகள்தன்திருக்கரங்களால் வழங்கினார்.இந்ததகவலைதன்வந்திரி குடும்பத்தினர்தெரிவித்தனர்.
No comments:
Post a Comment