ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வசந்த நவராத்திரி நிறைவு மற்றும்
ஸ்ரீ ராம நவமி வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் வசந்த நவராத்திரி நிறைவு மற்றும் ஸ்ரீ ராம நவமி மஹோத்சவம், இன்று பங்குனி 16, வியாழக்கிழமை 30.03.2023 காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை 7 அடி உயரமுள்ள ஸ்ரீ பட்டாபிஷேக ராமருக்கு சிறப்பு ஹோமங்கள் பூஜைகள், விஷேச ஆராதனைகள் நடைபெற்றது.
ஓரே கல்லில் 14 தெய்வங்களுடன் ராஜ பரிபாலனம் செய்யும் காட்சியுடன் ஸ்ரீ பட்டாபிஷேக ராமர்
ஸ்ரீ ராமபிரான் அவதரித்த நாளே ஸ்ரீராம நவமி என்பதாகும். ஸ்ரீ ராமபிரான் ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரமாகவே இருந்தபோதும், மனிதனாகப் பிறப்பெடுத்ததால் நல்வினை, தீவினைகளுக் கேற்ப கஷ்டங்களை அனுபவித்தும், ஏகபத்தினி விரதனாக உலகிற்கு வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீராமர். இவர் பங்குனி மாதம், வளர்பிறை சுக்ல பட்சத்தில் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவருக்கு உலகில் வேறெங்கும் இல்லாதவாறு ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 7அடி உயரத்தில் ஒரே கல்லில் ஸ்ரீ ராமர், சீதாலக்ஷ்மி, லக்ஷ்மணர், பரதன், சத்ருக்னன், ஈஸ்வரர், கணபதி, ஆஞ்சநேயர், வசிஷ்டர், பிரம்மா போன்ற 14 தெய்வங்களுடன் குடையுடன் பட்டாபிஷேக கோலத்தில் காட்சித்தரும் விதத்தில் ஸ்ரீ ராமருக்கு தனிச்சன்னதி அமைத்துள்ளார். இவருக்கு ஸ்ரீ ராம நவமியில் சிறப்பு ஹோமம், நவ கலச திருமஞ்சனம், புஷ்பாஞ்சலி வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஸ்ரீ ராம நவமியின் பலன்கள்
குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் ஒன்று சேரவும், குடும்ப நலன் பெருகவும், வறுமையும், பிணியும் அகலவும், நாடியப் பொருட்கள் கைகூடவும், சுபகாரியத் தடைகள் விலகவும், ராஜாங்க காரியங்கள் வெற்றி பெறவும், உயர் அதிகாரிகள் மூலம் நன்மை பெறவும், ராஜ வஸ்துக்கள் பெறவும் விஷேச மூலிகைகளைக் கொண்டு திரவிய ஹோமமும் நவ கலச திருமஞ்சனமும் இதனைத் தொடர்ந்து துளசி மாலை, பழங்கள், வெற்றிலை, பூ இவைகளை கொண்டு ஸ்ரீ பட்டாபிஷேக ராமருக்கு துளசி மற்றும் குங்குமம் கொண்டு திவ்ய நாம அர்ச்சனையும் வடை, பருப்பு, எலுமிச்சம் பழம், புளி, வெல்லம் இவற்றைக் கொண்டு பானகம், நீர்மோர், பஞ்சாமிர்தம் மற்றும் சர்க்கரைப் பொங்கல் ஆகிய நிவேதனமும் நடைபெற்றது. கலந்து கொண்ட அனைவருக்கும் மேற்கண்ட பிரசாதம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயருக்கும் சீரடி சாய் பாபாவிற்கும் விஷேச திரவிய அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. மாலை 5.00 மணியளவில் வசந்த நவராத்திரி நிறைவை முன்னிட்டு ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரிக்கு சிறப்பு ஹோம அபிஷேகமும் அர்ச்சனையும் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment